செய்தி

இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ வடக்கில் அறிமுகம்!

  • May 26, 2026
  • 0 Comments

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை (26.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்த ‘ஒருவழி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்எல்ஏக்களின் தாவல்களால் தடுமாறும் அதிமுக!

  • May 26, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கனவே மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளார். அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிலுள்ள பலர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர். சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் […]

இலங்கை

சரிவுக்குப் பின் மீளவும் வலுப்பெற்ற இலங்கை ரூபாய்!

  • May 26, 2026
  • 0 Comments

சமீபகாலமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் தற்போது பலமடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித்தில் தெரியவந்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.32 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 328.69 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஸ்பெயினில் மற்றுமொரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் இரண்டாவது ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தமையால் ஏனையோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் 12 பேர்  தலைநகர் மெட்ரிட்டில் (Madrid) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா திரும்பிய ‘IS’ குடும்பங்கள்: சட்டம் பாயும் என எச்சரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மற்றுமொரு குழுவினர் மெல்போர்ன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளனர். சிரியாவின் வடபகுதியில் உள்ள அல்-ரோஜ் (Al-Roj) முகாமில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட இக்குழுவினர், கத்தாரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை இன்று வந்தடைந்தனர். ‘ஐஎஸ் மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படும் இரு பெண்களும், அண்மையில் 18 வயதை எட்டிய ஓர் இளைஞனும், அவர்களின் ஏழு குழந்தைகளுமே இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேவேளை, சிரிய முகாமில் இருந்து […]

உலகம் செய்தி

ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது பாகிஸ்தான்!

  • May 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணையுமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்ரேலுடனான உறவை சீராக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள் பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Khawaja Asif திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ” எங்களுடைய அடிப்படை கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முரணாக அமையும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது; […]

அரசியல் இலங்கை செய்தி

அரசு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தேரர்!

  • May 26, 2026
  • 0 Comments

அடுத்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்சவே நாட்டை ஆள்வதற்கு பொருத்தமான தலைவர் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ஆட்சியாளர்கள் சரிவர செயல்படாவிட்டால் அவர்களை விரட்டுவது தேரர்களின் கடமையாகும். அந்தவகையில் இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலின்போது நிச்சயம் விரட்டியடிக்கப்படும். மக்களுடன் இணைந்து இதற்குரிய சமர் முன்னெடுக்கப்படும். நாமல் […]

செய்தி விளையாட்டு

FIFA World Cup: ஈரான் அணி அமெரிக்காவில் தங்க அனுமதி மறுப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணி அந்நாட்டில் தங்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதன் விளைவாக, ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்வார்கள் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அறிவித்துள்ளார். ஈரான் அணி தனது Group G பிரிவின் மூன்று போட்டிகளையும் அமெரிக்காவிலேயே விளையாட வேண்டியுள்ளது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் அணி […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. அரசை இயக்கும் மறைமுக கரம் எது? புதிய சர்ச்சையைக் கிளப்பும் எதிரணி!

  • May 26, 2026
  • 0 Comments

“மக்கள் ஆணைமூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று நாட்டில் இருக்கும்போது, அதற்கு மேலான சக்தியொன்றே தீர்மானம் எடுக்கின்றது என நாம் சுட்டிக்காட்டிவந்தோம். இது உண்மை என்பதை ரில்வின் சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா யாழில் வைத்து வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு, “ உரிய […]