சரிவுக்குப் பின் மீளவும் வலுப்பெற்ற இலங்கை ரூபாய்!
சமீபகாலமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் தற்போது பலமடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித்தில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.32 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 328.69 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.





