இலங்கை முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை 600 ரூபாய் – மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் இலங்கை!

  • May 26, 2026
  • 0 Comments

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “தோராயமாக டீசல் விலை 600 ரூபாய்க்காவது அதிகரிக்கப்பட வேண்டும். மே 6 ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தது 20 […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா இலக்குகள்மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

  • May 26, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில், லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. லெபனானின் கிழக்குப்பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய படையினர், ராணுவ ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் கட்டடங்களைக் குறிவைத்து 22 ட்ரோன் ற்றும் ஏவுகணைத் […]

உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: தெற்கு ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

  • May 26, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானியப் படைகளால் எங்கள் படைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது. தெற்குத் துறைமுக […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவின் புதிய ஏவுகணைத் திட்டம்!

  • May 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் முக்கிய நகர்வாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் (Western Australia ) அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பிரமாண்ட உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு காண்பதற்கும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களை எதிர்கொள்வதற்கும் இந்த ஆயுத உற்பத்தி மையம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தனது இராணுவத் தேவைகளுக்காகவும் தற்காப்புப் படைகளுக்காகவும் (ADF) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளைச் சார்ந்திருப்பதை […]

செய்தி

அரசின் ஆயுள் முடியப்போகிறது: கொக்கரிக்கிறார் விமல்!

  • May 26, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். “மே மாதம் கைதட்டுவதற்கு தயாராக இருக்குமாறு மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி […]

செய்தி விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

  • May 26, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று Play – off சுற்று ஆரம்பமாகின்றது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் , குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் […]

உலகம் செய்தி

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் […]

இலங்கை

தேர்தல் சட்டங்களில் மாற்றம் : பொதுமக்களிடம் கருத்து கோர பரிந்துரை!

  • May 25, 2026
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை   மீளாய்வு செய்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான குழுவினர்  இன்று கூடிய கலந்துரையாடினர். இதன்போதே மக்களின் கருத்துக்களை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் மீளாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

உலகம்

தைவானுக்கான ஆயுத விற்பனையில் நீண்டகால கொள்கையை மீறிய ட்ரம்ப்!!

  • May 25, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தொடர்கின்ற நிலையில் தைவானுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் தற்காலிகத் தலைமைச் செயலாளர் ஹங் காவோ (Hung Cao) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 14 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் “மிக விரிவாக” விவாதித்ததாகவும், “அடுத்த குறுகிய காலத்திற்குள்” ஒரு முடிவை எடுப்பதாகவும் ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம், தைவான் குறித்த முடிவுகளை சீனாவுடன் இணைந்து […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது

  • May 25, 2026
  • 0 Comments

நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லடசத்தை அண்மித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 32 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி […]