உலகம்

ஹன்டா வைரஸ் பரவல் : தனிமைப்படுத்தல் காலத்தை நீட்டித்தது ஆஸ்திரேலியா!

  • May 28, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு பேருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஆஸ்திரேலியா அரசாங்கம் நீட்டித்துள்ளது. பெர்த் அருகே உள்ள ஒரு மையத்தில், அவர்கள் 42 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தனிமைப்படுத்தலில் உள்ள ஆறுபேரும் நலமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டேவுக்குச் சென்ற எம்வி ஹோண்டியஸ் கப்பலில் […]

உலகம்

எபோலா அச்சம் : காங்கோவுடனான எல்லையை மூடும் உகாண்டா!

  • May 28, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான தனது எல்லையை உடனடியாக மூடுமாறு உகாண்டா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காங்கோ நோயாளிகளிடமிருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட உகாண்டா சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜெஸ்கா அலுபோ (Jesca Alupo)  தலைமையிலான உள்ளூர் எபோலா பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற எல்லை மூடுதல்கள் பொதுவாக அச்சத்தின் காரணமாகவே செயல்படுத்தப்படுகின்றன, அவற்றுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என உலக […]

உலகம்

தைவான், சீனா விவகாரம் அணுவாயுத நெருக்கடியை உருவாக்கும்!!

  • May 28, 2026
  • 0 Comments

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் இராணுவ மோதல், விரைவாக ஒரு அணு நெருக்கடியாக உருவெடுக்கக்கூடும் என்று புதிய பாதுகாப்பு மதிப்பீடு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானுக்கு வொஷிங்டன் அளித்து வரும் பாதுகாப்பையும் பெய்ஜிங் கடுமையாக விமர்சித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான சர்வதேச மூலோபாய ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுடடிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஆசிய-பசிபிக் பகுதியை மையமாகக் கொண்ட” ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் விளிம்பில் […]

உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – நாளை அமெரிக்கா பறக்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

  • May 28, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் (Marco Rubio) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. பாகிஸ்தான் பிரதிநிதிகள் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். […]

உலகம்

சீனாவில் லொறியொன்றுடன் மோதிய பேருந்து – 13 பேர் உயிரிழப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் 09 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், விபத்து நடந்தபோது 16 பேர் இருந்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அதிகாரிகள் பணிக்குழுவொன்றை நியமித்துள்ளனர். மேலும் மோசமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதல் காரணமாக அதிகளவிலான உயிரழப்புகள் ஏற்படுகின்றமை […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் தாக்குதல்: 906 பாலஸ்தீனர்கள் பலி!

  • May 28, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் 2026 மே 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி […]

உலகம் செய்தி

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரான்மீது புதிய மற்றும் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி விதித்துள்ளது. இதற்கமைய ஈரானின் கடல்சார் அமைப்பான PGSA உடன் வணிகம் செய்பவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அந்த அமைப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது. குறிப்பாக, ஈரானிய விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் தரையிறங்குவதையும் எரிபொருள் நிரப்புவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஈரானின் வருமான ஆதாரங்களை முடக்குவதன் மூலம் அந்த நாட்டை பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதே இந்தத் தடைகளின் முக்கிய நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான […]

ஐரோப்பா

வறண்ட நிலமாக மாறும் அமேசன் காடு : அதிக வெப்பத்தால் பலர் உயிரிழக்க வாய்ப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

வலுவான எல் நினோ புவி வெப்பமயமாதலுடன் ஒருசேர நிகழ்வதால், “பலவிதமான தீவிர வானிலை நிகழ்வுகள்” உருவாகி வருவதாக காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பானதாக நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச காலநிலை வரம்பை பூமி கடந்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் காலநிலை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO), இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் பகுதி கிட்டத்தட்ட 1.66°C வெப்பமடையும் என எச்சரித்துள்ளது. அதேநேரம் மனிதர்களின் தொடர் தீங்கு விளைவிக்கும் […]

உலகம் செய்தி

மீண்டும் போர் தொடுக்க வேண்டாம்- அமெரிக்கா, ஈரானுக்கு ரஷ்யா அழைப்பு

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ மோதலுக்குள் செல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா  தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக மாஸ்கோ தனது யோசனைகளை யார்மீதும் திணிக்கவில்லை என்றும் அவர்  கூறினார். மறுபுறம், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர்களை ஜுன் 11 இல் சந்திக்கின்றார் முதல்வர் விஜய்!

  • May 28, 2026
  • 0 Comments

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி தமிழக முதல்வர் சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லிக்கு நேற்று பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை. இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியாகின. இந்நிலையிலேயே ஜூன் 11-ம் திகதி முதல்வர் விஜய் டெல்லி வருகிறார். அப்போது அவர் […]