ஐரோப்பா

வறண்ட நிலமாக மாறும் அமேசன் காடு : அதிக வெப்பத்தால் பலர் உயிரிழக்க வாய்ப்பு!

வலுவான எல் நினோ புவி வெப்பமயமாதலுடன் ஒருசேர நிகழ்வதால், “பலவிதமான தீவிர வானிலை நிகழ்வுகள்” உருவாகி வருவதாக காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாதுகாப்பானதாக நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச காலநிலை வரம்பை பூமி கடந்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் காலநிலை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO), இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் பகுதி கிட்டத்தட்ட 1.66°C வெப்பமடையும் என எச்சரித்துள்ளது.

அதேநேரம் மனிதர்களின் தொடர் தீங்கு விளைவிக்கும் செயற்பாட்டினால் பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அபாயகரமான வறட்சி ஏற்பட்டு காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் காலநிலை அமைப்பு மற்றும் இங்கிலாந்தின் வானிலை ஆய்வு அலுவலகத்தின் கணிப்புகளின்படி, 2026 மற்றும் 2030-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சராசரி உலக வெப்பநிலை, 1.5°C-ஐத் தாண்டுவதற்கு 75 சதவீதம்  வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்