உலகம்

ஹன்டா வைரஸ் பரவல் : தனிமைப்படுத்தல் காலத்தை நீட்டித்தது ஆஸ்திரேலியா!

ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு பேருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஆஸ்திரேலியா அரசாங்கம் நீட்டித்துள்ளது.

பெர்த் அருகே உள்ள ஒரு மையத்தில், அவர்கள் 42 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை தனிமைப்படுத்தலில் உள்ள ஆறுபேரும் நலமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டேவுக்குச் சென்ற எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவலால் குறைந்தது 11 பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, மூன்று பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்