உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – நாளை அமெரிக்கா பறக்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.

இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் (Marco Rubio) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

பாகிஸ்தான் பிரதிநிதிகள் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டன் பயணமாகின்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!