ஐரோப்பா செய்தி

பிரெக்ஸிட்டில் மீள இணைய ஆர்வம் காட்டும் மக்கள்!

  • April 19, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 53 சதவீதமான மக்கள் மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ ( Best for Britain) நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு, தொழிலாளர் கட்சி, லிபரல் டெமாக்ரட் மற்றும் பசுமைக் கட்சி வாக்காளர்களிடையே அதிகமாக உள்ளது. அதே சமயம் கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்த ஐக்கிய இராச்சிய கட்சி ஆதரவாளர்களிடையே குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.      

உலகம்

ஏவுகணை ஏவுதளங்ளை அதிக வேகத்தில் புதுப்பிக்கும் ஈரான்!

  • April 19, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களை அதிக வேகத்தில் புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி (Majid Mousavi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நிலத்தடி ஏவுகணைத் தளத்தை அவர் ஆய்வு செய்யும் காணொளியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் போது எதிரிகளால் தங்களது ஆயுதங்களை மீண்டும் உருவாக்க முடியவில்லை, அவர்கள் உலகின் மறுபக்கத்திலிருந்து ஆயுதங்களைச் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் –  150 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழப்பு

  • April 19, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன் கடந்த 24 மணித்தியாலங்களில், 150 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு ஒழித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. டெலிகிராம் செயலியில் வெளியிட்ட அறிக்கையில், லெபனானின் பல பகுதிகளில் உள்ள கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட சுமார் 300 இராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் IDF கூறியுள்ளது. மேலும், பல ஹிஸ்புல்லா தளபதிகளும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் தனது […]

உலகம் செய்தி

ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது –   தொடர்ந்தும் பதற்றம்

  • April 19, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டதற்குப் பதிலாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல்களை கண்காணிக்கும் MarineTraffic இணையதளத்தின் தகவலின்படி, தற்போது எந்தக் கப்பலும் அந்த நீரிணையை கடக்கவில்லை. பல கப்பல்கள் வளைகுடா பகுதியில், குறிப்பாக ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரை அருகே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. நேற்று வரை இந்த முக்கிய கடல்வழியாக சில கப்பல்கள் சென்றிருந்தாலும், தெஹ்ரான் நீரிணையை மூடுவதாக அறிவித்த பிறகு, போக்குவரத்து வேகம் கடுமையாகக் குறைந்துள்ளது. […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் தாக்குதல் – பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் சடலம் பாரிஸுக்கு

  • April 19, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உயிரிழந்த பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் உடல் இன்று மாலை பாரிஸுக்கு அனுப்பப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை (யூனிஃபில்) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை, யூனிஃபில் ரோந்து குழுவின் மீது சிறு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்தப் படையில் பணியாற்றிய ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்புள்ளதாக குற்றம் சுத்தினார். இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த மூன்று அமைதிப்படை வீரர்களில் இருவர் பெய்ரூட்டில் சிகிச்சை பெற்று […]

இலங்கை

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • April 19, 2026
  • 0 Comments

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துள்ளார். பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbor First Policy) கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது […]

உலகம்

ஏமன் மீதான தாக்குதல்கள் – உயர் எச்சரிக்கையில் ஹுதிகள்!

  • April 19, 2026
  • 0 Comments

ஏமன் மக்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள உயர்மட்ட எச்சரிக்கையுடன் இருப்பதாக ஹூதி தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது அல்-அதிஃபி (Mohammed al-Atifi) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாத இறுதியில், இஸ்ரேலைக் குறிவைத்து பல நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், ஹூதிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் முறையாக நுழைந்தனர். இது இந்த மோதலில் ஒரு புதிய முனையைக் […]

உலகம்

ஈரான் போர் – அமெரிக்காவை இழுத்துவிட்டது இஸ்ரேல்தான்!

  • April 19, 2026
  • 0 Comments

ஈரான் போருக்குள் இஸ்ரேல்தான் அமெரிக்காவை இழுத்துவிட்டது என்று முன்னாள் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசன் கூறுகிறார். நிதி திரட்டும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர்  இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களுக்காக இல்லாத ஒரு போருக்குள் அமெரிக்க இராணுவத்தை இழுத்துவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதும் கமலா ஹாரிசன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே கமலா ஹாரிஸின் கருத்தை தொடர்ந்து தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,  ​​மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் […]

உலகம்

ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

  • April 19, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா, தென் கொரியாவுடனான சாத்தியமான சந்திப்புகள் குறித்த பேச்சுக்களுக்கு மத்தியில், வட கொரியா இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஏழாவது முறையாக  ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது. தனது தற்காப்புத் திறன்களை வெளிப்படுத்துவதோடு, சர்வதேச அளவில் செல்வாக்கைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டே மேற்படி ஏவுகணைகளை ஏவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானைப் போலல்லாமல், எங்களிடம் தற்காப்புத் திறன்கள் உள்ளன என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழியாக இந்த ஏவுகணை […]

இலங்கை

முல்லைத்தீவு மருத்துவமனையில் இலஞ்சம் கோரிய அதிகாரிகள்!

  • April 19, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்  30,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின்  பேரில், நேற்று (18) இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. முறைப்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தில், மார்ச் மாதத்திற்கான காசோலையை வழங்க சந்தேக நபர்கள் […]

error: Content is protected !!