முல்லைத்தீவு மருத்துவமனையில் இலஞ்சம் கோரிய அதிகாரிகள்!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 30,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் பேரில், நேற்று (18) இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
முறைப்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தில், மார்ச் மாதத்திற்கான காசோலையை வழங்க சந்தேக நபர்கள் 30,000 ரூபாய் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.





