ஈரான் போர் – அமெரிக்காவை இழுத்துவிட்டது இஸ்ரேல்தான்!
ஈரான் போருக்குள் இஸ்ரேல்தான் அமெரிக்காவை இழுத்துவிட்டது என்று முன்னாள் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசன் கூறுகிறார்.
நிதி திரட்டும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்காக இல்லாத ஒரு போருக்குள் அமெரிக்க இராணுவத்தை இழுத்துவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதும் கமலா ஹாரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே கமலா ஹாரிஸின் கருத்தை தொடர்ந்து தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.




