உலகம் செய்தி

யுனைடெட் ஏர்லைன்ஸ் ( United Airlines) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • November 17, 2025
  • 0 Comments

டல்லாஸிலிருந்து (Dallas) சிகாகோவுக்குச் (Chicago) பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் (Louis International Airport)  விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த விமானம் மிசோரியில் (Missouri) உள்ள லம்பேர்ட் செயிண்ட் லூயிஸ் (Lambert St. Louis) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது மனைவி கொண்டுவந்துள்ள பொதியில் வெடிக்கும் சாதனம் இருப்பதாகக் […]

இலங்கை செய்தி

எதிரணிகளின் பேரணி: இன்று வெளியான விசேட அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பேரணிக்குரிய ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை விடுத்தார். “ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை விரும்புபவர்கள் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்பார்கள். அதேபோல வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, இதனை […]

உலகம்

கரீபியன் கடலை வந்தடைந்த அமெரிக்காவின் விமானந்தாங்கி போர் கப்பல்!

  • November 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (Gerald R. Ford) விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும்  உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் பிரச்சனம் அப்பகுதியில் அதிகரித்து வருவதை புலப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) இன் ஒரு பகுதியாக  குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெனிசுலாவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை […]

இலங்கை

என்.பி.பி. அரசிலுள்ள தமிழ் எம்.பிக்கள் உடன் பதவி விலக வேண்டும்!

  • November 17, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. எனவே, பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா உட்பட அக்கட்சியிலுள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடன் பதவி விலக வேண்டும்” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவு வருமாறு, “ அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. […]

பொழுதுபோக்கு

மூன்று நாட்களில் பல கோடிகளை அள்ளி ‘காந்தா’

  • November 17, 2025
  • 0 Comments

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘காந்தா’ திரைப்படம் முதல் 3 நாட்களில் ஈட்டிய வசூல் விபரம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ளார். படம் முதல் நாள் மட்டும் உலக அளவில் ரூ.10 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. முதல் 3 நாட்களை சேர்த்து படம் இதுவரை ரூ.22 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் […]

இலங்கை

திருகோணமலையில் காவல்துறையினரின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நேற்று ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் காவல்துறையினர் தலையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். இது வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் அதே வேளையில், பிற மதங்களுக்கு மரியாதை அளிப்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தை மேற்கோள் […]

உலகம் செய்தி

வியட்நாமில் பேருந்தின் மீது சரிந்து விழுந்த மண்மேடு – 06 பேர் பலி!

  • November 17, 2025
  • 0 Comments

வியட்நாமில் ஆபத்தான மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று மண்ணில் புதையுண்டதில் 06 பேர் உயிரிழந்துள்ளடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். கான் லே  (Khanh Le ) வழியாக நேற்று பயணித்துக்கொண்டிருந்த  பேருந்தின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதையின் இருப்புறமும் மண்சரிவு ஏற்பட்டதால் குறித்த இடத்தை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்தில் 32 பேர் பயணம் செய்ததாகவும், 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், […]

இந்தியா

இந்தியர்களை மெக்காவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து விபத்து – 42 பேர் உடல் கருகி பலி!

  • November 17, 2025
  • 0 Comments

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர். லொறியொன்றுடன் மோதிய நிலையில் பேருந்தின் எரிபொருள் டேங்கர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் வெளியேற முடியாமல் பேருந்தில் சிக்கிக்கொண்ட நிலையில், ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதுடன், எஞ்சிய அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர்  பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் […]

பொழுதுபோக்கு

“பைசன்” படத்தின் OTT ரிலீஸ் அறிவிக்கப்பட்டது

  • November 17, 2025
  • 0 Comments

துருவ் விக்ரமுக்கு திருப்புமுனையாக இருந்த படம் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி வெளியான இப்படத்தின் OTT வெளியீடு குறித்து அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, வரும் 21ம் திகதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

“அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி”

  • November 17, 2025
  • 0 Comments

​எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை அறிவூட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் உள்ள தாமரைக் கோபுர வரவேற்புத் தளத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார். ​இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ​”2025 ஆம் […]