உலகம் செய்தி

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவிகள்!

  • November 17, 2025
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இன்று 25 மாணவிகளை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாடசாலையின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு நபர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆயுதம் ஏந்திய எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்ததாகவும், மாணவிகள் அவர்களின் தங்கும் விடுதிகளில் இருந்து கடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள்  அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும்,  மேலும் மாணவிகளை கடத்துவதற்கு […]

உலகம் செய்தி

எத்தியோப்பியாவில் மார்பர்க் (Marburg) வைரஸ் தொற்றால் மூவர் பலி!

  • November 17, 2025
  • 0 Comments

தெற்கு சூடானின் அண்டை பகுதியில் கண்டறியப்பட்ட மார்பர்க் (Marburg) வைரஸ் தொற்றால் எத்தியோப்பியாவில் (Ethiopia) மூவர் உயிரிழந்துள்ளதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் 17 பேர் சந்தேகத்தின் அடிப்படையில்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செயலில் உள்ள வழக்குகள் எதுவும் இல்லையென்றாலும் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மெக்டெஸ் டாபா ( Mekdes Daba)  கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பு , ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் […]

இலங்கை செய்தி

350 வகையான மருந்துகளுக்கு விலை குறைப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA)  350 வகையான மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை இன்று அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய சிகிச்சைகள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட NMRA தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல முக்கியமான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி!

  • November 17, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களை விநியோகிப்பதற்கான தடையை ஜெர்மனி அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஆயுத விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் – ஹமாசிற்கும் இடையிலான போரின்போது சில ஆயுதங்கள் காசா மக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  விநியோகம் செய்வதை ஜெர்மனி நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இருநாட்டிற்கும்  இடையில்  போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து  இந்த முடிவு […]

இலங்கை

திருமலை சம்பவம்: இனவாதம், அரசியலுக்கு இடமில்லை! அரசு திட்டவட்டம்!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலை விவகாரத்தை வைத்து இனவாதம் மற்றும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்கப்படாது. கடந்தகால சம்பவங்கள் இனி நடக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மதியம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு, “ புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படக்கூடும் என்பதாலேயே திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இரவு 10 மணியளவில் சம்பவம் நடந்ததால் உரிய பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியவில்லை. எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

உலகம்

எல்லைப் பிரச்சினை – வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா!

  • November 17, 2025
  • 0 Comments

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களை தீர்ப்பதற்கும் பகிரப்பட்ட எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவதற்கும் இராணுவ ரீதியாக பேச்சுவார்த்தைகளை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது. இராணுவ எல்லைக் கோட்டின் குறுக்கே வட கொரிய வீரர்கள் ஊடுறுவியதை தொடர்ந்து தென்கொரிய இராணுவ வீரர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். தென்கொரியாவின் மேற்படி குற்றச்சாட்டை வடகொரியா மறுக்கிறது. இந்நிலையிலேயே இராணுவ ரீதியான முறையான பேச்சுவார்த்தைகளுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது. எவ்வாறாயினும் இந்த முன்மொழிவை வடகொரியா ஏற்குமா என்பது கேள்விக்குறிதான் என அரசியல் […]

இலங்கை

திருகோணமலை பிரச்சினை: நாமலின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலை பிரச்சினையை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையை பாதுகாப்புக்காகவே அது வெளியில் எடுக்கப்பட்டது என பொதுமக்கள் […]

உலகம் செய்தி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) போர்க்குற்ற நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு  பாரிய போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை ஒடுக்குவதற்கு பலத்தை பயன்படுத்த ஹசீனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்விளைவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1400 பேர் உயிரிழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து அமைந்த இடைக்கால அரசாங்கம் சிறப்பு […]

இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது.  அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது.  அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை அறிக்கை […]

பொழுதுபோக்கு

சாச்சனா வீட்டில் சந்தோஷம்

  • November 17, 2025
  • 0 Comments

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலங்க்கு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாச்சனா. இதன் மூலம் பிரபலமான இவர் ஹார்ட் பீட் வெப் தொடரில் சிறப்பாக நடித்தார் இந்நிலையில், இப்போது சாச்சனா தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்