விளையாட்டு

மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் குமார் சங்கக்கார

  • November 17, 2025
  • 0 Comments

2026ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் முன்னாள் இலங்கை அணியின் தலைவரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமைக்குரிய பிரான்சைஸிகளின் கிரிக்கெட் பணிப்பாளராக சங்கக்கார பதவி உயர்வு பெற்றிருந்தார். தற்போது தலைமைப் பயிற்சியாளராகவும் இரட்டைப் பொறுப்பை வகிக்கவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஐபிஎல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிட்டிற்குப் பதிலாக சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு […]

இலங்கை

சஜித்தின் கொடும்பாவி எரிப்பு: 28 ஆம் திகதி பதிலடி!

  • November 17, 2025
  • 0 Comments

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் தமது கட்சிமீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் எதிரான கருத்தை முன்வைத்தனர் என சுட்டிக்காட்டி, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

செவ்வாய்க் கிரகத்தில் பிரமிக்க வைக்கும் எரிமலை! புகைப்படங்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்

  • November 17, 2025
  • 0 Comments

செவ்வாய்க் கிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) தொடர்பான புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் (Mars Express Orbiter) மூலம் எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலையில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள் ஆறுகளாக ஓடிய நிலையில், தற்போது உறைந்த நிலையில் தடயங்களாக உள்ளதாகப் புகைப்படத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், பல கிலோமீட்டர் உயரமுள்ள பாறை முகடுகளும் (Rock Ridges) ஆங்காங்கே காணப்படுவதாக ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் […]

இலங்கை

சீனாவில் மேலுமொரு தூதரகம் அமைக்கிறது இலங்கை!

  • November 17, 2025
  • 0 Comments

சீனாவில் மேலுமொரு தூதரகத்தை நிறுவுவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து அதிகளவு வெளிநாட்டு பயணிகளை வரவழைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய 2026 ஆரம்பத்தில் சீனாவின் செங்டு (Chengdu) நகரில் மேற்படி கொன்சல் ஜெனரல் அலுவலகம் அமையும் எனவும் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார். “ சீனாவில் சில நகரங்களில் இலங்கையின் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையிலேயே புதிய அலுவலகம் […]

உலகம்

பாலியல் குற்றவாளியால் ட்ரம்பிற்குச் சிக்கல் – குடியரசுக் கட்சிக்குள் பிளவு

  • November 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியில் ட்ரம்புடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீனுடன் ((Marjorie Taylor Greene)) இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் போது மார்ஜரி டெய்லருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சிக்குள் உள்ளக மோதல்கள் தீவிரம் […]

பொழுதுபோக்கு

விஜய் டிவி குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய நாஞ்சில் விஜயன்

  • November 17, 2025
  • 0 Comments

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபல்யமடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எத்தனையோ கலைஞர்களை உருவாக்கிய பெறுமை விஜய் டிவியை சேரும். ஆனால், தற்போது விஜய் டிவி மூலமாக முன்னேறிய ஒருவர் விஜய் டிவி பற்றி பேசியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார். தற்போது […]

இலங்கை செய்தி

நினைவேந்தல் நடத்த முடியும்: புலிகளை நினைவுகூர இடமில்லை!

  • November 17, 2025
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்தது.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் உங்கள்மீது முன்வைத்த விமர்சனக் கணைகளையே எம்மை நோக்கி மீள செலுத்த வேண்டாம். புதிய ஆயுதம் என்பது, எம்மைவிட சிறந்த திட்டங்கள் அவசியம் என்பதாகும். தேசிய […]

உலகம்

ஐ.நா. காலநிலை மாநாடு: இரு நாடுகளுக்கிடையில் கடும் போட்டி!

  • November 17, 2025
  • 0 Comments

COP 31 காலநிலை மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்குரிய வாய்ப்பை பெறுவதில் ஆஸ்திரேலியா தீவிரம் காட்டிவருகின்றது. எனினும், மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றி கருத்து வெளியிட ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மறுப்பு தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்குரிய ஐ.நா. காலநிலை (COP 31) மாநாட்டை பசுபிக் நாடுகளுடன் இணைந்து அடிலெய்டில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. அதேபோல துருக்கியும் வாய்ப்புகோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. இதனால் மேற்படி மாநாட்டை எங்கு நடத்துவது என்பது […]

உலகம்

வெனிசுலா எல்லையில் அமெரிக்கப் போர்க்கப்பல் – கரீபியன் கடலில் தீவிரமடையும் பதற்றம்

  • November 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். போர்ட் (USS Gerald R. Ford) கரீபியன் கடல் பகுதியில் முகாமிட்டிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெனிசுலாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, கரீபியன் கடல் பகுதியில் செல்லும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 20 தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரு […]

இலங்கை

திருமலையில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம் நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு!

  • November 17, 2025
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்க முற்பட்டதால் அங்கு நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார். “திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது: சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனவும் அவர் கூறினார். “திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]