அரசியல் கைதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு
பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் மக்களின் ஆதரவுடன் தேசிய நல்லிணக்கத்தை […]













