செய்தி

கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவில் அடுத்தடுத்து 2 முறை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாண்டியாகோ டி கியூபா, ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ போன்ற பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அருகில் உள்ள ஜமைக்காவில் உள்ள உள்ளூர் ஊடகங்களும் அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளன. நிலநடுக்கம் காரணமாகப் பெரிய சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தின் மையம், கியூபாவின் பார்டோலோம் மாசோவில் இருந்து 25 மைல் (40 கிலோமீட்டர்) தெற்கே அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவைக் கடுமையாகத் தாக்கியதில், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவைத் தாக்கியுள்ளது. ஒக்டோபர் மாத இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி