ஐரோப்பா

தென்கொரியாவிடம் ஆயுத உதவி கோரியுள்ள உக்ரேன்

  • November 27, 2024
  • 0 Comments

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான பேராளர் குழு, ஆயுத உதவி கோரி இந்த வாரம் தென்கொரியா செல்வதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களை அக்குழுவினர் கோருவர் என்று கூறப்படுகிறது. உக்ரேனில் நடைபெறும் போர் குறித்துத் தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷின் வோன்-சிக்கிடம் அவர்கள் கலந்துரையாடியதாக டோங்கா இல்போ நாளேடு, நவம்பர் 27ஆம் திகதி தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, கடந்த அக்டோபர் மாதம் தென்கொரிய ஒலிபரப்புக் கழகத்துக்கு […]

இலங்கை செய்தி

கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • November 27, 2024
  • 0 Comments

கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு […]

செய்தி மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் எச்சரிக்கை

  • November 27, 2024
  • 0 Comments

ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைகூடியுள்ளது. அமெரிக்காவுடன் ஒத்துழைக்கப் போவதாக கூறிய நெட்டன்யஹு, இஸ்ரேல் தனது ராணுவத்தின் சுதந்திரமான செயல்பாட்டைத் தொடரும் என்றார். இஸ்ரேல் இனி ஈரானின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த உடன்பாடு வழியமைக்கும் என்று நெத்தன்யாஹு குறிப்பிட்டுள்ளார். ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் உறுதியாய் உள்ளதாக அவர் கூறினார். இஸ்ரேல் […]

இலங்கை

வவுனியாவில் அலைகல்லுப்போட்டகுளம் உடைப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 27, 2024
  • 0 Comments

வவுனியா அலைகல்லு போட்ட குளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வாழ்வியல்

காலை உணவைத் தவிரப்பதால்… உடல் – மன ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கும்

  • November 27, 2024
  • 0 Comments

உணவாகக் கருதப்படுகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நேரம் இல்லை எனக் கூறி பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்கவும் உணவை தவிர்க்கிறார்கள். ஆனால், எந்த காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், நாம் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதற்கான வலுவான காரணங்கள் என்பதை விளக்கிக் கூறினார். நாள் முழுவதும் தேவையான ஆற்றல் நாள் முழுவதும் வேலை செய்ய நமக்கு நிறைய ஆற்றல் […]

இலங்கை

இலங்கையில் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • November 27, 2024
  • 0 Comments

இலங்கையின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்ப்பாசன திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு காட்டுத்தீ அபாயம் – உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

  • November 27, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – பெர்த் நகரில் வடக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டுத்தீ அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Wedge Island மற்றும் Cooljarloo ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் அவசர எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மக்கள் மீண்டும் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கும், வீடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், கூடிய விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு […]

இலங்கை செய்தி

இலங்கையில் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

  • November 27, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன் எச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

  • November 27, 2024
  • 0 Comments

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 0112 472 757 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், ‘disaster.ops@police.gov.lk’ என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் […]

விளையாட்டு

அணிக்குள் ரோஹித், கில் – அடுத்த போட்டியில் மாற்றமடையும் இந்திய அணி

  • November 27, 2024
  • 0 Comments

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை பரபரப்பாக தொடங்கியிருக்கிறது. பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2018-19, 2020-21 ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களிலும் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை மீண்டும் […]