வடகொரியா-ரஷ்ய நட்புறவு அதிகரிப்பு – பதற்றமடைந்துள்ள சீன அரசாங்கம்
வடகொரியா-ரஷ்ய நட்புறவு அதிகரித்து வருவதால் சீன அரசு பதற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராகப் போரிடுவதற்கு துருப்புக்களை அனுப்புவதில் ரஷ்யாவை வடகொரியத் தலைவர் ஆதரிப்பார் என்பதில் சீனாவுக்கு கடுமையான சந்தேகம் உள்ளதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதன் விளைவாக, ரஷ்யாவுடனான வட கொரியாவின் உறவில் சீனா பெருகிய முறையில் சங்கடமாக உள்ளது. மேலும் பியோங்யாங்கிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பு அமைதியற்றது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் கர்ட் கேம்ப்பெல் கூறுகிறார். […]












