இலங்கை செய்தி

இலங்கையில் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன் எச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 2ஆம் நிலை எச்சரிக்கையும், காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கண்டி கங்கவட்ட கோரளை, உடுதும்பர, தோலுவ, யட்டிநுவர, உடபலத்த, பஹத்தஹேவஹெட்ட, உடுநுவர, பாததும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய இடங்களிலும், மாத்தளையில் உக்குவெல, யடவத்த, ரத்தோட்டை, பல்கமுவ, அம்பகல பல்கமுவ, வில்கமுவ, நாவுல ஆகிய இடங்களுக்கும். நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனையிலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை