அதிபர் லாய் சிங்-டேயின் பசுபிக் வட்டார பயணம் ; விமனா தற்காப்பு பயிற்சியை நடத்திய தைவான்
தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது. தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வார இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது. அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு […]













