இலங்கை

இலங்கை – ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் கைதான 7 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகள் தொடர்புடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இன்று (28) இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள், தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.அதன்படி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்