ஆப்பிரிக்கா

கொங்கோ குடியரசில் பரவும் ஆபத்தான தொற்று – 79 பேர் பலி – 300 பேர் மருத்துவமனையில்

  • December 5, 2024
  • 0 Comments

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

  • December 5, 2024
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலையானது நிலையான விலையில் உள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இவ்வாறு நிலையான நிலையில் உள்ளது. கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஆஸ்திரேலியா செய்தி

பண்டிகைக் காலம் ஆரம்பம் – மது அருந்துவதைத் தவிர்க்கும் ஆஸ்திரேலியர்கள்

  • December 5, 2024
  • 0 Comments

பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியர்கள் மது அருந்துவதைத் தவிர்த்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 62 சதவீதம் பேர் இந்த ஆண்டு மதுவைக் கைவிட்டதாகக் கூறியுள்ளனர். பல ஆஸ்திரேலியர்கள் குறிப்பாக குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆல்கஹால் பானங்களைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் ஆஸ்திரேலியர்களிடையே மதுபானத்தின் விலை கணிசமாக அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியர்கள் மதுபானங்களைத் தவிர்த்துள்ளனர் என்ற செய்தி மிகவும் சாதகமான சூழ்நிலை என்று கருத்துரையாளர்கள் கூறுகின்றனர். 2021 […]

செய்தி வாழ்வியல்

டீ – காபி அதிக சூடாக குடிப்பவரா நீங்கள்…? புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்

  • December 5, 2024
  • 0 Comments

ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபி என்பது சோர்வை விரட்டும் அருமருந்தாக கருதப்படுகிறது. சோர்வு அல்லது மந்தமாக உணர்ந்தால், ஒரு கப் காபி அல்லது டீ குடிக்கலாம் என நினைக்காதவர்களை பார்ப்பது அரிது. கையில் ஒரு கோப்பை சூடான பானத்துடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது என்பது நமக்கு புத்துணர்ச்சி தரும் ஒரு பணியாகும். ஆனால், இதே டீ அல்லது காபி அளவிற்கு அதிகமான சூட்டில் அருந்துவதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய நகரங்களின் காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

  • December 5, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் நாளை வெப்பநிலை 40 பாகை செல்சியஸை தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நாளை விக்டோரியாவில் வெப்பநிலை அதிகபட்ச வெப்பநிலையை எட்டும் என்றும், மெல்போர்னில் வெப்பநிலை 34 பாகை செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் கூறப்படுகிறது. அடிலெய்டில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸாக உயரும், அதே சமயம் தெற்கு ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் 40 பாகை செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தெற்கு ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

  • December 5, 2024
  • 0 Comments

இலங்கை சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் ஒன்று தற்போது 200 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம் உடைத்த தேங்காயின் ஒரு பகுதி 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம்

கியூபாவில் முடங்கிய மிகப்பெரிய மின் நிலையம் – மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

  • December 5, 2024
  • 0 Comments

கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடைகள் மூடப்பட்டு, பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபா அரசு டீசல் இறக்குமதியை குறைத்துக்கொண்டதால், அங்குள்ள மின் நிலையங்களை இயக்க முடியாத சூழல் எற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக அடிக்கடி நாடு முழுவதும் மின் வெட்டுகள் ஏற்பட்டுவருகின்றன. அண்மையில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் பாதிக்கப்பட்டிருந்த கியூபா மக்கள், இத்தகைய மின் […]

அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள்

பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள் – பார்வையிட்ட ரஷ்ய மக்கள்

  • December 5, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரியா வட்டாரத்தில் வட பகுதியில் சிறுகோள் ஒன்று பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இது தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. 69 சென்ட்டிமீட்டர் நீளமுள்ள அந்தச் சிறுகோள் கண்களால் பார்க்கக்கூடிய தீப்பிழம்பை ஆகாயத்தில் உருவாக்கக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமைப்பு தெரிவித்தது. சைபீரியா வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தீப்பிழம்பைக் கண்டதாக அது குறிப்பிட்டது. சிறுகோளுக்குத் தற்காலிகமாக C0WEPC5 எனும் பெயர் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் எவை?

  • December 5, 2024
  • 0 Comments

ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல காலம் ஆகி விட்டது. கடந்த 80-90 ஆண்டுகளைப் போல தொலைபேசி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இல்லாமல், காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இன்றைய உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. அந்த அளவிற்கு அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. ஸ்மார்போன் சந்தை மிகவும் வலுவாக உள்ள நிலையில், […]

விளையாட்டு

2வது போட்டியில் விராட் கோலி விளையாடுவதில் சந்தேகம்

  • December 5, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்ட குதூகலத்துடனும், 1-0 என்ற முன்னிலையுடனும் இந்திய அணி (Team India) இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் (Adelaide Oval) வரும் டிச. 6ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கும் […]