அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள்

பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள் – பார்வையிட்ட ரஷ்ய மக்கள்

ரஷ்யாவின் சைபீரியா வட்டாரத்தில் வட பகுதியில் சிறுகோள் ஒன்று பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இது தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

69 சென்ட்டிமீட்டர் நீளமுள்ள அந்தச் சிறுகோள் கண்களால் பார்க்கக்கூடிய தீப்பிழம்பை ஆகாயத்தில் உருவாக்கக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமைப்பு தெரிவித்தது.

சைபீரியா வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தீப்பிழம்பைக் கண்டதாக அது குறிப்பிட்டது. சிறுகோளுக்குத் தற்காலிகமாக C0WEPC5 எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவரை 11 சிறுகோள்கள் பூமியல் தென்பட்டுள்ளன. அவற்றில் 4 இந்த ஆண்டு தென்பட்டன.

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.