ஐரோப்பா

சுவிட்சர்லாந்து சீனாவுடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிக்க பேச்சுவார்த்தை

  • September 24, 2024
  • 0 Comments

சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பார்மெலின் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை “மேம்படுத்த” பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார். அதன்படி சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோவுடன் பார்மெலின் ஒரு மெய்நிகர் சந்திப்பை மேற்கொண்டதாக X பதில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளில் சுவிட்சர்லாந்தின் நோக்கம் சீன சந்தையில் சுவிஸ் நிறுவனங்களுக்கான கட்டமைப்பின் நிலைமைகளை மேம்படுத்துவதாகும், என பார்மெலின் X இல் குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 8 – திகதி நேரம் எல்லாம் குறிச்சாச்சு

  • September 24, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை தற்போது பிக்பாஸ் தரப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை, 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமலஹாசன் தான். உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். திரைப்பட […]

இலங்கை

இலங்கை : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க ஜனாதிபதியுடன் ஒன்றினையும் நாமல்!

  • September 24, 2024
  • 0 Comments

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1994ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறிய போதிலும், எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான […]

இலங்கை

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற IMF தயார்: வெளியான அறிவிப்பு

  • September 24, 2024
  • 0 Comments

இலங்கையின் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்புப் பொதியின் சமீபத்திய மீளாய்வு உட்பட இலங்கையின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கட்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், “IMF-ஆதரவு வேலைத்திட்டத்தின் மூன்றாவது மறுஆய்வு நேரம் குறித்து புதிய நிர்வாகத்துடன் கூடிய விரைவில் கலந்துரையாடுவோம்” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. “2022 இல் இலங்கையின் மிக […]

மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்குவோம் : சூளுறைக்கும் இஸ்ரேல் : மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

  • September 24, 2024
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதை தொடர்ந்து  ஈரான் ஆதரவு குழு  வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ வசதிகளைத் தாக்கியுள்ளது. இது முழுமையான மோதல்களை கட்டவிழ்த்துள்ள நிலையில் பலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.  இந்த மோதல்கள் கிட்டத்தட்ட 500 பேரைக் கொன்றதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பிற்காகத் தப்பியோட அனுப்பியதாகவும் கூறுகின்றனர். லெபனான் அதிகாரி ஒருவர், 1975-1990 உள்நாட்டுப் போருக்குப் பிறகு வன்முறையால் லெபனானில் தினசரி அதிக அளவில் உயிரிழப்பதாகக் கூறினார். இஸ்ரேலுக்குள் 60 கிமீ (37 […]

ஐரோப்பா

பிரித்தானியர்களிடம் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

  • September 24, 2024
  • 0 Comments

பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனுக்கான தனது திட்டங்களுடன் ஒத்துழைக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். குறுகிய காலத்தில் கடுமையான முடிவுகள் எதிர்காலத்தில் உயர் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான தெருக்கள் மற்றும் சிறந்த சேவைகள் போன்ற ஆதாயங்களுக்கு வழி வகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுள்ளார். வடக்கு ஆங்கில நகரமான லிவர்பூலில் தனது தொழிற்கட்சியின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய போதே ஸ்டார்மர் இதனை தெரிவித்துள்ளார். அவரது அரசாங்கம் கடினமான முடிவுகளை எடுக்கிறது, அதாவது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை […]

உலகம்

பிரேசிலில் விமான நிலையத்தில் சிக்கிய பெண் : எக்ஸ்ரேவில் தென்பட்ட மர்ம பொருள்!

  • September 24, 2024
  • 0 Comments

பிரேசிலின் சாவ் பாலோவில் இருந்து பயணித்த பெண் ஒருவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். எக்ஸ்ரே இயந்திரத்தில் அவருடைய வயிற்றில் ஏராளமான போதை மாத்திரைகள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபரின் வயிற்றில் இருந்து  60க்கும் மேற்பட்ட “கொக்கெய்ன் மாத்திரை” மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

புதிய ஆட்சி மாற்றம்! இலங்கையில் பல மாகாண ஆளுநர்கள் ராஜினாமா

  • September 24, 2024
  • 0 Comments

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பல மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த ஆளுநர்கள் வருமாறு: மத்திய மாகாண ஆளுநர் – லலித் யூ. கமகே வடமத்திய மாகாண ஆளுநர் – மஹிபால ஹேரத் தென் மாகாண ஆளுநர் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கிழக்கு மாகாண ஆளுநர் – செந்தில் தொண்டமான் சப்ரகமுவ மாகாண […]

இலங்கை

இலங்கை : பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் சஜித்!

  • September 24, 2024
  • 0 Comments

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வரவுள்ள  பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும்  கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பில் சஜித்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும் பாராளுமன்ற தேர்தலில் பிரமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரினி

  • September 24, 2024
  • 0 Comments

புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி மற்றும் சமூக நீதிக்கான அவரது பணிக்காக அறியப்பட்ட அமரசூரியவின் நியமனம் இலங்கை அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் […]

error: Content is protected !!