இலங்கை

இலங்கை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

  • September 24, 2024
  • 0 Comments

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர். இவர் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகவும், மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

இலங்கை: நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி அனுர

  • September 24, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா

ஆங் சான் சூச்சியை விடுவிக்கும்படி போப் ஃபிரான்சிஸ் கோரிக்கை

  • September 24, 2024
  • 0 Comments

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியை விடுவிக்குப்ம்படி போப் ஃபிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.சூச்சிக்கு வத்திகனில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கவும் அவர் முன்வந்துள்ளார். ஆசியாவிலுள்ள இயேசு சங்கத்தினருடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் போப் இவ்வாறு கூறினார். “சூச்சியின் விடுதலைக்குக் கோரிக்கை வைத்தேன். அவரது மகனை ரோமில் சந்தித்தேன். சூச்சியை வத்திகனில் வரவேற்கவும் அழைப்பு விடுத்துள்ளேன்,” என்று தமது 12 நாள் தென்கிழக்காசியப் பயணத்தின்போது நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலில் போப் தெரிவித்தார். 87 வயதாகும் போப் […]

உலகம்

இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த வியட்நாம் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

  • September 24, 2024
  • 0 Comments

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உச்சிமாநாட்டிற்கு இடையே, வியட்நாம் அதிபர் டோ லாம்-ஐ சந்தித்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற எதிர்கால உச்சிமாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்நாம் சோசலிச குடியரசின் அதிபருமான டோ லாம்-ஐ நியூயார்க்கில் சந்தித்தார். தலைமைப் பொறுப்புகளை ஏற்றுள்ள அதிபர் டோ லாமுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், […]

ஆசியா

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

  • September 24, 2024
  • 0 Comments

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசுஷிமா துறைமுகத்தில் 20 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. டோக்கியோவின் ஹச்சிஜோ டவுன், ஹச்சிஜோ-ஜிமாவில் 50 செமீ சுனாமி காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டோக்கியோவின் தெற்கே உள்ள தொலைதூர தீவுகளில் எரிமலை செயல்பாட்டினால் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் இன்று காலை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது

இலங்கை

இலங்கை: கர்ப்பமான 15 வயது சிறுமி : பெற்றோர் செய்த மோசமான செயல்

  • September 24, 2024
  • 0 Comments

பொலிஸ் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் தமது 15 வயது மகளைபாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவியதாக சந்தேகிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் வஹல்கட பொலிஸாரால் கெபித்திகொல்லாவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 32 வயதான சந்தேக நபர் பதவிய பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய பெற்றோர் அனுமதித்ததாகவும், அவள் கர்ப்பத்தை […]

இலங்கை

இலங்கையில் அதிரடியாக வெளியான அடுத்த அறிவிப்பு : மூவர் கொண்ட அமைச்சரவை நியமனம்!

  • September 24, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய மூன்று பேர் கொண்ட அமைச்சரவை சற்று முன்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய பிரதமராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே நீதி, கல்வி, தொழிலாளர், கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பின்வரும் அமைச்சுப் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பாதுகாப்பு, நிதி, பொருளாதார மேம்பாடு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் […]

முக்கிய செய்திகள்

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் ” கலைக்கப்படவுள்ள பாராளுமன்றம் “: புதிய பிரமர் வெளியிட்ட அறிவிப்பு

  • September 24, 2024
  • 0 Comments

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையின் புதிய அமைச்சுக்கான செயலாளர்கள் நியமனம்!

  • September 24, 2024
  • 0 Comments

பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் உட்பட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நியமனங்களின் முழு பட்டியல் பின்வருமாறு: 1. திரு. ஜி.பி. சபுதந்திரி – பிரதமரின் செயலாளர் 2. திரு.W.M.D.J. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர் 3. திரு. கே.டி.எஸ். ருவன்சந்திரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் 4. திரு. கே.எம்.எம். சிறிவர்தன – […]

உலகம்

Mpox தொற்றின் புதிய திரிபால் பாதிக்கப்பட்ட நபர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

  • September 24, 2024
  • 0 Comments

உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) பொது சுகாதார அவசரநிலை என்று பெயரிடப்பட்ட Mpox அல்லது வைரஸின் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது ஆப்பிரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் இந்த புதிய திரிபு “கிளாட் 1பி” என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் துபாயிலிருந்து வந்த தெற்கு கேரளாவில் வசிக்கும் 38 வயதுடையவர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் நோய்த்தொற்றின் முதன்மை அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் […]

error: Content is protected !!