இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் எது தெரியுமா?
இந்த வாரம் ஓடிடியில் நிறைய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள், எந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்க்கலாம். பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னாபென் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 27-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. […]













