ஆசியா

முதன் முறையாக தைவானின் ஜலசந்தியை பயன்படுத்திய ஜப்பான் : சீனாவின் நிலைப்பாடு!

  • September 26, 2024
  • 0 Comments

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படை நாசகாரக் கப்பலான சசானாமி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்துள்ளது. நவீன ஜப்பானிய போர்க்கப்பல் இந்த மூலோபாய உணர்திறன் கொண்ட நீர்வழிப்பாதையில் முதன்முறையாகச் பயணித்துள்ளது. ஜப்பானிய நாசகார கப்பல் பன்னாட்டு கடற்படை பயிற்சிகளுக்கு செல்வதற்காக இவ்வழியை பயண்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரம் குறித்த வழியை ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கப்பல்களும் பயன்படுத்தியுள்ளன. சீனா தனது பிராந்திய கடற்பரப்பின் ஒரு பகுதியாக கருதும் நீரிணை வழியாக வெளிநாட்டு கடற்படை கப்பல்களை கடப்பதை தொடர்ந்து […]

ஆசியா

08பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை : 08 பேர் கொலை – வெடிமருந்துகள் மீட்பு!

  • September 26, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தீவிரவாதிகளின் வசம் இருந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளிட்ட விவரங்களை ராணுவம் தெரிவிக்கவில்லை. இத்தகைய தாக்குதல்கள் பெரும்பாலும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது TTP என்றும் அழைக்கப்படும் பாகிஸ்தானிய தாலிபான்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.

பொழுதுபோக்கு

நம்புங்க.. இது நம்ம கனகா தான்! நண்பர் வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ….

  • September 26, 2024
  • 0 Comments

கண்ணழகி என்றால் நடிகை மீனாவை சொல்வார்கள். ஆனால் அவருக்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களே தன் கண்ணழகால் கட்டிப் போட்டவர் தான் நடிகை கனகா. ராமராஜனுடன் இணைந்து இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் அப்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் கனகா மீது பித்து பிடித்து சுற்றினார்கள் என்று கூட சொல்லலாம். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என அடுத்த டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடித்த கனகா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- போலி விமானப் பயணங்கள்; ஒரு மில்லியன் பயணிகளை ஏமாற்றிய குவாண்டாஸ்

  • September 26, 2024
  • 0 Comments

இல்லாத விமானப் பயணங்கள் தொடர்பில் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் மோசடியால், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பயணிகள் பத்தாயிரக்கணக்கில் வழங்கப்படாத சேவைகளுக்குப் பதிவு செய்திருந்தனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து குவாண்டாஸ் கடந்த ஆண்டு 120 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் (S$105.73 மி.) அபராதமாகவும் ரத்தான விமானப் பயணங்களுக்குரிய பயணச்சீட்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாகவும் செலுத்த ஒப்புக்கொண்டது. பயணிகள் பயணச்சீட்டுகளை போலியான தளங்களின்வழி வாங்கியுள்ளனர் என்பது குறித்து தவறான தகவல் அளித்ததன் […]

இலங்கை

இலங்கை : தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் நிறைவு திகதி அறிவிப்பு!

  • September 26, 2024
  • 0 Comments

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் பயன்படுத்தப்படவுள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என அவர் விளக்கமளித்துள்ளார். கொழும்பில் இன்று (26) காலை […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 21 நாள் போர் நிறுத்தம் – தயார் நிலையில் உலக தலைவர்கள்!

  • September 26, 2024
  • 0 Comments

அண்டை நாடான லெபனானில் ஹெஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் மீது தரைவழி தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி நேற்று (25) சூசகமாக தெரிவித்திருந்தார். ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களினால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய 60,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். […]

ஆசியா

மலேசியாவில் பள்ளி உணவகத்தில் நச்சுணவு; 101 மாணவர்களுக்கு பாதிப்பு

  • September 26, 2024
  • 0 Comments

பள்ளி உணவகத்தில் விற்கப்பட்ட பொரித்த கோழியையும் சாக்லேட் பானத்தையும் உட்கொண்டதால் 101 மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டதாக ‘மலேமெய்ல்’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.ஈப்போவிலுள்ள ‘எஸ்கே செப்போர்’ பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடைய ஐந்து மாணவர்கள் குறித்து செப்டம்பர் 25ஆம் தேதி காலை எட்டு மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் சுகாதாரத் துறை இயக்குநர் உறுதிப்படுத்தினார். ஈப்போவின் இரண்டு சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் மாணவர்களுக்கு சிகிச்சை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேருந்துக் கடத்தல்; பயணி ஒருவர் மரணம்

  • September 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்துக் கடத்தலில் ஒருவர் உயிரிழந்உள்ளார்.பேருந்தைக் கடத்தியதாக நம்மப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை கூறியது. அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 25ஆம் இகதி அதிகாலை 1 மணி அளவில் பேருந்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பேருந்தை வழக்கமான பாதையிலிருந்து திசை திருப்ப ஓட்டுநரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதைப் பார்த்து பேருந்திலிருந்து தப்பிச் செல்ல பயணிகள் சிலர் பதற்றத்துடன் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.கடத்தப்பட்ட […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி அநுரவை புகழ்ந்த மஹிந்த – பூரண ஆதரவை அறிவித்த வஜிர

  • September 26, 2024
  • 0 Comments

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில் முன்னெடுத்துச் செல்ல வல்லவர் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று குருநாகலில் ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஒரு தேசம் என்ற வகையில் அந்த நோக்கத்திற்காக இந்த நாட்டின் அனைத்து தேசப்பற்றுள்ள குடிமக்களும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தபோதிலும், இந்த நாட்டை […]

செய்தி

அமைதி உச்சி மாநாடு – இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் ஜெலன்ஸ்கி

  • September 26, 2024
  • 0 Comments

இரண்டாவது உலக அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உலக அமைதி உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், ஒற்றுமையே அமைதிக்கு வழிவகுக்கும் என்றும், போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நாடுகளின் கூட்டு நடவடிக்கை அவசியமானது என்றும் கூறினார். மேலும், உலக அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

error: Content is protected !!