ஆசியா செய்தி

சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

  • September 8, 2024
  • 0 Comments

Wetland virus (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் முதன்முதலில் 2019ல் கண்டறியப்பட்டது. மங்கோலியாவில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டார். காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு காணப்பட்டன. இந்த அறிகுறிகள் சற்று சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 14,600 உயிரினங்கள் […]

இலங்கை செய்தி

கண்ணாடி வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாத பெண் யாழில் உயிரிழப்பு

  • September 8, 2024
  • 0 Comments

கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் , கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி , உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் குணமாகதாதல் கடந்த 03ஆம் திகதி யாழ் , […]

இந்தியா செய்தி

சுத்தமான காற்றின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் நகரம்

  • September 8, 2024
  • 0 Comments

காற்றின் தர மேம்பாட்டிற்காக இந்தியாவின் முதல் பெரிய நகரமாக சூரத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஜபல்பூர் மற்றும் ஆக்ரா உள்ளது. ஜெய்ப்பூரில் “நீல வானத்துக்கான தூய்மையான காற்றுக்கான சர்வதேச தினத்தை” கொண்டாடும் தேசிய பயிலரங்கில் நடைபெற்ற ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2024 இன் போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் “தேசிய சுத்தமான காற்று நகரம்” விருதுகளை வழங்கியது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சூரத், ஜபல்பூர் மற்றும் ஆக்ரா முதல் மூன்று இடங்களைப் பெற்ற […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள்

  • September 8, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சொந்த நாட்டிலேயே ‘சிறையில்’ அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களின் உரிமைப் பிரச்சாரகர்களின் கூற்றுப்படி, மேற்கத்திய நாடுகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக, இப்போது அதிகமான பெண்கள் ஆன்லைனில் திரண்டு வருகிறார்கள். பேசுவதும், கை அசைப்பதும், புன்னகைப்பதும் ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு கடந்த கால விஷயம்.

இலங்கை செய்தி

சஜித்திற்கு ஆதரவாக நடத்திய மாவனெல்ல கூட்டத்தில் குழப்பம்

  • September 8, 2024
  • 0 Comments

மாவனெல்லயில் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் பேசிக்கொண்டிருக்கும்போது, தங்களை 30 வருடங்களாக ஏமாற்றிவருவதாக கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து கோபமடைந்த கபீர் ஹசீம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர் கூச்சலிட குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த, கபீர் ஹசீம் அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். கேள்விகேட்ட […]

உலகம் செய்தி

நேட்டோ நாட்டின் வான்பரப்பில் ரஷ்ய ஆளில்லா விமானங்கள்

  • September 8, 2024
  • 0 Comments

ருமேனியா மற்றும் லாட்வியா ஆகிய இரண்டு நாடுகளின் வான்பரப்பில் இன்ற  புட்டினின் ஆளில்லா விமானங்கள் நுழைந்தாக குற்றம் சுமத்தப்பட்டுளது. ஆளில்லா விமானங்கள் நுழைந்த சம்பவங்களை இரு நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன. ரஷ்யா போரை விரிவுபடுத்துவதாக ருமேனியா கருதுகிறது மற்றும் ரஷ்யாவை தங்கள் நாட்டின் வான்பரப்பிற்குள் நுழைவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கேட்டுள்ளது. இரவு நேரத்தில், நாடு தனது வான்வெளியைக் கண்காணிக்க F-16 போர் விமானத்தை அனுப்பியது, அதே நேரத்தில் இந்த விஷயம் குறித்து நேட்டோவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பா

ரஷ்யாவிடம் ஈரான் ஏவுகணைகள் : உக்ரைன் விடுத்துள்ள அழைப்பு

ஈரானிய ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு மாற்றும் சாத்தியம் இருப்பதாக வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலையடைவதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையில், தெஹ்ரானுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான ஆழமான இராணுவ ஒத்துழைப்பு உக்ரைன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் மற்றும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பா செய்தி

NATO பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ ஆளில்லா விமானம்

  • September 8, 2024
  • 0 Comments

லாட்வியாவின் ஜனாதிபதி ரஷ்ய இராணுவ ஆளில்லா விமானம் அதன் எல்லையில் விழுந்து நொறுங்கியதாகக் தெரிவித்துள்ளார். மேலும் நேட்டோவின் கிழக்கு எல்லைகளில் வான்வெளி மீறல்கள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சோவியத் யூனியனால் ஆளப்பட்ட பால்டிக் அரசு, இப்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பினராக உள்ளது, சுதந்திரத்திற்குப் பிறகு மாஸ்கோவுடன் பதட்டமான உறவுகளைக் கொண்டுள்ளது, மேலும் பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன. “ரஷ்ய இராணுவ ஆளில்லா விமானம்,லாட்வியாவின் கிழக்குப் […]

ஆசியா

பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி இஸ்ரேலில் வெடித்தது பாரிய போராட்டம்!

காஸாவில் எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தலைமையிலான அரசாங்கம் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட வேண்டும் என இஸ்ரேலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் அண்மையில் மீட்கப்பட்டதையடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுன்னப்படுகிறது.

விளையாட்டு

SLvsENG Test – பந்து வீச்சிற்கு சாதகமாக மாறிய மூன்றாம் நாள்

  • September 8, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 154 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் […]