இலங்கை செய்தி

கண்ணாடி வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாத பெண் யாழில் உயிரிழப்பு

கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் , கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி , உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் குணமாகதாதல் கடந்த 03ஆம் திகதி யாழ் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிருமி தொற்று ஏற்பட்டமையால் , மாரடைப்பு ஏற்பட்டு , மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை