ஆப்பிரிக்கா

எகிப்தில் இரு பயணிகள் ரயில் மோதி பாரிய விபத்து : உயிராபத்தான நிலையில் ஐவர்!

  • September 15, 2024
  • 0 Comments

எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கெய்ரோவின் வடகிழக்கே ஷர்கியா மாகாணத்தின் தலைநகரான ஜகாசிக் நகரில் இது நடந்தது. ரயில்களில் ஒன்று ஜகாசிக்கிலிருந்து இஸ்மாலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

லெபனான் எல்லையில் பூசல்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விட்டுத்துள்ள ஹிஸ்புல்லா

  • September 15, 2024
  • 0 Comments

லெபனான் உடனான எல்லை அருகே உள்ள பகுதிகளில் இடம்பெயர்ந்த 100,000 பேரை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நோக்கம் கொண்டிருக்கும் இஸ்ரேலின் போர் முயற்சி, மேலும் நூறாயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துவிடும் என ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதி எச்சரித்துள்ளார். வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பை பழைய நிலைக்குக் கொண்டுவர இஸ்ரேல் உறுதியுடன் இருப்பதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியதைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைக் கொண்ட லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் தளபதியான நயிம் காசிம் இந்த […]

இலங்கை

இலங்கை தேர்தல் : கடந்த காலங்களை விட இம்முறை தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

  • September 15, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மொத்தம் 203 புகார்கள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,916 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு காணப்படுவதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசியா

சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவு குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 15, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவால் நேரும் ஆபத்து, குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவால் நேரும் ஆபத்து, இடையூறு ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் விதிவிலக்கல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பின் 65ஆம் ஆண்டுநிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார். நோய்ப்பரவல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களைத் தற்போது சமாளிக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற சவால்களால் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், பல […]

இலங்கை

இலங்கையில் இலஞ்ச ஊழல் வலையில் சிக்கிய கும்பல் – பொலிஸாரும் உள்ளடங்குவதாக தகவல்

  • September 15, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் தொடர்பான 158 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 379 ஊழல் புகார்களும், 79 முறைகேடான ஆதாய முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. அத்துடன், இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 8 பொலிஸாருக்கு அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காலகட்டத்தில் […]

பொழுதுபோக்கு

ட்ரெண்டிங்கில் மணிமேகலை… வெளிநாட்டுக்கு பறந்த பிரியங்கா

  • September 15, 2024
  • 0 Comments

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் ஆங்கர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து துவங்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் துவக்கம் முதலே கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவந்தார் மணிமேகலை. கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்தார் மணிமேகலை. இந்நிலையில் இந்த சீசனில் அவர் நிகழ்ச்சியின் ஆங்கராக களமிறங்கியுள்ளார். தர்ஷனுடன் இணைந்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக […]

ஐரோப்பா

ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெள்ளப்பெருக்கு – 4 பேர் மரணம்

  • September 15, 2024
  • 0 Comments

வெள்ளப்பெருக்கு காரணமாக ருமேனியாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நேற்றைய தினம் முதல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று செக் குடியரசு முழுவதும் 38 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தலைநகரமான ப்ராக் நகரிலும் வெள்ளத் தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் மிருகக்காட்சிசாலையும் மூடப்பட்டுள்ளது. போலாந்திலும் நதிகளின் ஆபத்தான நிலை அதிகரித்துள்ளதால் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக […]

பொழுதுபோக்கு

விஜய் டிவிக்கு பெரிய அடி – மோதி கொண்ட மணிமேகலை vs பிரியங்கா

  • September 15, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலேயே குக் வித் கோமாளி சீசன் தான் மன அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பெயர் வாங்கி இருக்கிறது. குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ரக்சன் மற்றும் மணிமேகலை எடுத்து நடத்தி வருகிறார்கள். இதில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என்று வழக்கமாக இருந்தாலும் இதுவரை இருந்த சீசன் போல் இல்லை என்று பலரும் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பதை குறைத்துக் கொண்டார்கள். அதற்கு […]

இலங்கை

இலங்கையில் வீடொன்று சுற்றிவளைப்பு – மெத்தையின் கீழ் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

  • September 15, 2024
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குற்றம் செய்யும் நோக்கில் இந்த வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் களுத்துறை, மிஹிகடவத்தை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சைக்கிளிலில் பயணித்து சாதித்த இளைஞன்

  • September 15, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு பயணித்து இளைஞன் ஒருவர் சாதித்துள்ளார். சைக்கிளிலேயே பயணம் செய்து குறித்த இளைஞன் சாதனை படைத்துள்ளார். நாள் ஒன்றுக்கு 200 கி.மீ தூரம் பயணித்து மொத்தமாக மூன்று மாதங்களில் அவர் 16,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளார். Tim Dubois எனும் 23 வயதுடைய இளைஞன் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி பிரான்ஸில் இருந்து புறப்பட்டு, பல்வேறு நகரங்கள், காடுகளைக் கடந்த தென்னாபிரிக்காவைச் சென்றடைந்துள்ளார். இந்த சைக்கிளில் பயணத்துக்காக அவர் ஒதுக்கிய தொகை […]