பொழுதுபோக்கு

அஜித்துடன் 5ஆவது முறையாக ஜோடி சேரும் நடிகை? அப்போ அவங்க இல்லையா?

  • May 24, 2024
  • 0 Comments

மார்க் ஆண்டனி படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணையும் நடிகைகள் பற்றிய அப்டேட்டும் அவ்வப்போது […]

ஐரோப்பா

லண்டன்-டப்ளின் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எச்சரிக்கை!

  • May 24, 2024
  • 0 Comments

லண்டன்-டப்ளின் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அம்மை நோய் தாக்கியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹெல்த் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அம்மை நோயின் அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து வைத்திர்களின் உதவியை நாடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

கோவையில் ஆரஞ்சு எச்சரிக்கை… சித்திரை சாவடி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்

  • May 24, 2024
  • 0 Comments

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேலைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன. இந்நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆறு வரும் வழித்தடமான சித்திரை சாவடி அணையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர் வர துவங்கியதால் அப்பகுதியில் […]

இலங்கை

இலங்கை – சீரற்ற காலநிலையால் மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

  • May 24, 2024
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி ராஜ்குமார் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய செய்தி!

  • May 24, 2024
  • 0 Comments

கிரேட் பிரிட்டன் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 12.7 மில்லியன் மாநில ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பில் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது அண்மைக்காலமாக பிரித்தானியாவின் பணவீக்கம் படிப்படியாக குறைவடைந்து வருகிறது. இது பாங்க் ஆஃப் இங்கிலாந்து எதிர்பார்த்த பணவீக்கமாகும். குறிப்பாக பிரித்தானியாவில் பணவீக்கமானது 2.5 சதவீதமாக குறைந்துள்ளது. எரிசக்தி விலைகளும் 07 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. இந்நிலையில் பணவீக்கத்தின் தன்மைக்கு ஏற்ப  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கும் பணத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்படும். ஆகவே ஓய்வூதியகாரர்கள் இந்த […]

பொழுதுபோக்கு

‘அமரன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு

  • May 24, 2024
  • 0 Comments

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக […]

உலகம்

சீனாவின் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடும் அமெரிக்கா : எதிர்க்கும் மஸ்க்!

  • May 24, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் EVகள் மீதான வரிகளை நான்கு மடங்காக உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, சீன மின்சார வாகனங்கள் (EV கள்) மீதான அமெரிக்க கட்டணங்களை தான் எதிர்ப்பதாக டெஸ்லா முதலாளி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பரிமாற்ற சுதந்திரத்தை தடுக்கும் அல்லது சந்தையை சிதைக்கும் விஷயங்கள் நல்லதல்ல எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா சீனாவில் சந்தையில் எந்த […]

இலங்கை

இலங்கையில் மோசமான வானிலை – தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

  • May 24, 2024
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு பெல் 212 ஹெலிகாப்டரும் எம்ஐ 17 ஹெலிகாப்டர்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!

  • May 24, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் எரிசக்தி விலை வரம்பு  £1,568 ஆக குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  ஜூலை 1 முதல் ஆற்றல் விலை உச்சவரம்பு £1,568 ஆக குறையும், கட்டுப்பாட்டாளர் Ofgem அறிவித்துள்ளது. இது 07 வீத குறைப்பாகும். அதாவது கடந்த ஆண்டு ஜுலை மாதம் இருந்த அதிரிப்பை விட  506 பவுண்டுகள் குறைவாகும். இதேவேளை எரிசக்தி மற்றும் காலநிலை நுண்ணறிவு பிரிவு (ECIU) கடந்த மூன்று ஆண்டுகளில், சராசரி குடும்பத்தின் இரட்டை எரிபொருள் பில் £6,800 ஐ எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளமை […]

இந்தியா செய்தி

இந்தியாவில் முதன் முறையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • May 24, 2024
  • 0 Comments

இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ.ஆர் மற்றும் வி.ஆர்.எனும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி மெய் நிகர் காட்சி சார்ந்த தனி படிப்பு மற்றும் அதற்கான எக்ஸ்பீரியன்ஸ் மையம் துவங்கப்பட்டது. கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தன்னாட்சி தகுதியுடன் தேசியத் தரச் சான்றும் ஏ ப்ளஸ் தர மதிப்பீடும் பெற்று பல்வேறு புதிய துறை சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. […]

error: Content is protected !!