ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய செய்தி!

கிரேட் பிரிட்டன் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 12.7 மில்லியன் மாநில ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பில் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது அண்மைக்காலமாக பிரித்தானியாவின் பணவீக்கம் படிப்படியாக குறைவடைந்து வருகிறது. இது பாங்க் ஆஃப் இங்கிலாந்து எதிர்பார்த்த பணவீக்கமாகும்.

குறிப்பாக பிரித்தானியாவில் பணவீக்கமானது 2.5 சதவீதமாக குறைந்துள்ளது. எரிசக்தி விலைகளும் 07 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன.

இந்நிலையில் பணவீக்கத்தின் தன்மைக்கு ஏற்ப  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கும் பணத்தின் அளவில் அதிகரிப்பு ஏற்படும். ஆகவே ஓய்வூதியகாரர்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

டிரிபிள் லாக் நடவடிக்கையின் கீழ், மாநில ஓய்வூதியங்கள் மே முதல் ஜூலை வரையிலான சராசரி ஆண்டு வருவாய் வளர்ச்சி, செப்டம்பர் வரையிலான ஆண்டில் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) பணவீக்கம் அல்லது 2.5 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்