வட அமெரிக்கா

ஒரே வருடத்தில் 6 லட்சம் டொலர் வருமானம் ஈட்டிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்

  • April 17, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய துணைவியார் ஜில் பைடன் இருவரும் சேர்ந்து 619,976 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தங்களது வருமானத்தில் 23.7 சதவீதத்தை அவர்கள் வரியாகச் செலுத்தினர். இவ்விவரத்தை பைடன் திங்கட்கிழமையன்று வெளியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில் இவ்வாண்டு மீண்டும் பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனிடையே, அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துக் களம் காணவுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், உள்நாட்டு வருவாய்த் துறை தணிக்கை […]

ஐரோப்பா

பிரித்தானிய பிரதமரை தவிர்க்கும் இஸ்ரேல் பிரதமர்

  • April 17, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் நடத்துவதாக திட்டமிட்டிருந்த பேச்சுவாா்த்தையை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுனக் திங்கள்கிழமை பேசுகையில், ‘பிராந்திய பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பது குறித்து சிறிது நேரத்தில் நெதன்யாகுவுடன் தொலைப்சியில் ஆலோசனை நடத்தவுள்ளேன்’ என்று கூறினார். ஆனால், அந்த உரையாடலை நெதன்யாகு தவிா்த்துவருவதாக ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.  

மத்திய கிழக்கு

ஈரான் – இஸ்ரேல் போரின் பதற்றத்திற்கு மத்தியில் தலையிடும் அமெரிக்கா

  • April 17, 2024
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் சூடுபிடித்துள்ள நிலையில் அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விவாதிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டத்தை ஆதரிக்கும் […]

வாழ்வியல்

தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • April 17, 2024
  • 0 Comments

தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள் […]

மத்திய கிழக்கு

ஓமானை உலுக்கிய வெள்ளம் – 18 பேர் உயிரிழப்பு

  • April 17, 2024
  • 0 Comments

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக முசந்தம், அல் புரைமி, அல் தாஹிரா மற்றும் அல் தகிலியா ஆகிய ஐந்து அலுவலகங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பணியை அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • April 17, 2024
  • 0 Comments

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் மக்கள்தொகை அதிகரிப்பு காணப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் பிற குடியேற்றவாசிகளின் வருகையுடன், ஒரு வருடத்தில் அந்த தலைநகரங்களில் 300,000 குடியிருப்பாளர்களின் மக்கள்தொகை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள்தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பேர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர அறிக்கைகளின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய விசா முறை!

  • April 17, 2024
  • 0 Comments

இலங்கையில் புதிய விசா முறை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது இயங்கி வரும் ETA முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையான E விசா முறை இங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இங்கு சுற்றுலா விசாவின் கீழ் 08 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. வணிக விசாவின் கீழ் 04 வகையான விசாக்கள் வழங்கப்பட உள்ளன. புதிய வீசா முறை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் அது தொடர்பான […]

அறிந்திருக்க வேண்டியவை

விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு!

  • April 17, 2024
  • 0 Comments

நமது கிரகத்தில் இருந்து 2,000 ஒளியாண்டுகளுக்கும் குறைவான தொலைவில் உள்ள அக்விலா விண்மீன் தொகுப்பில் “தூங்கும் ராட்சத” கருந்துளையை ( Sleeping giant black hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாயன்று கூறியது. இது நமது சூரியனை விட கிட்டத்தட்ட 33 மடங்கு எடை கொண்டது, மேலும் பால்வீதியில் இவ்வளவு பெரிய நட்சத்திர தோற்றம் கொண்ட கருந்துளை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உண்மையில், இந்த வகை கருந்துளைகள் மிகவும் தொலைதூர விண்மீன் திரள்களில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 15 வயது சிறுவனால் ஏற்பட்ட பரபரப்பு

  • April 17, 2024
  • 0 Comments

பிரான்ஸில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன், 180 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்திய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். A13 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மின்னல் வேகத்தில் பயணித்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர். குறித்த கார் 90 கி.மீ வேகம் உள்ள குறித்த சாலையில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது. காரை தடுத்து நிறுத்திய பொலிஸார் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மகிழுந்தைச் செலுத்தியது 15 வயதுடைய சிறுவன் ஒருவர் என தெரியவந்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடுமையாக அமுலாகும் குடிவரவு சட்டம் – பலரை வெளியேற்ற நடவடிக்கை

  • April 17, 2024
  • 0 Comments

ஜெர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடுமையான குடிவரவு சட்டம் மூலம் அண்மைக்காலமாக நாட்டிக்குள் வரும் அகதிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதிகளின் வருகை கட்டுப்படுத்து உள்துறை அமைச்சர் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களில் ஜெர்மன் நாட்டினுள் வருகின்ற அகதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் 15 சதவீதமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் […]