இலங்கை

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!

  • April 14, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் பெய்த தொடர் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது 14 பேர் உயிரிழந்ததுடன் மூவர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சுலவேசி மாகாணத்தின் டானா டோராஜா மாவட்டத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்பு பணியினர் விரைந்து வந்ததாகவும், 14 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மோசமான வானிலை மீட்பு பணியை முன்னெடுப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் […]

ஐரோப்பா

ரஷ்யா கைப்பற்றிய பகுதியில் உக்ரைன் தாக்குதல் – 16 பேர் பலி!

  • April 14, 2024
  • 0 Comments

ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் படைகளால் கைப்பற்றப்பட்ட தெற்கு சபோரிஜியாவின் டோக்மாக் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யாவுக்கு சொந்தமான இந்த பகுதியை குறிவைத்து உக்ரைன் ஷெல் தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

GOAT-க்கு விசில் போடு… தளபதி குரலில் – முதல் சிங்கள் வெளியானது…

  • April 14, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்தின் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது. இதில், தளபதி விஜய் இரு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடி த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களான பிரசாந்த் மற்றும் பிரபுதேவா, நடிகைகள் லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திலிருந்து தற்பொழுது முதல் சிங்கள் […]

ஐரோப்பா

ஈரான் – இஸ்ரேல் மோதல் : களமிறக்கப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள்!

  • April 14, 2024
  • 0 Comments

ஈரானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பிரித்தானிய போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான ஜெட் விமானங்கள் இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. குறித்த வான்வெளியில் பாதுகாப்புக்காக ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரச இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார். நேற்று (13) […]

இலங்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

  • April 14, 2024
  • 0 Comments

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை

இலங்கை : வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புபவர்களுக்கு விசேட ரயில் சேவைகள்!

  • April 14, 2024
  • 0 Comments

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக இன்று பிற்பகல் முதல் மேலதிக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார். அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்த தமன்னா மற்றும் ராஷி கண்ணா..

  • April 14, 2024
  • 0 Comments

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடித்துள்ள அரண்மனை 4 படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அச்சச்சோ என தொடங்கும் இப்பாடலில் ஹீரோயின்கள் இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளனர். மேலும் இப்பாடலின் இறுதியில் படம் ஏப்ரல் 26 வெளியாகும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த ஒரு பாடலுக்காகவே தியேட்டரில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் குஷ்பூ, சிம்ரன் இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடலுக்கு நடனம் ஆகியுள்ளனர். […]

தமிழ்நாடு

விஜய் அடுத்து அரசியலில் களமிறங்கும் விஷால்… 2026-ல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டி என அறிவிப்பு

  • April 14, 2024
  • 0 Comments

2026ல் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இதனையொட்டி கோலிவுட் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். எனினும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை என அறிவித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, அதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விஜய் வரிசையில் […]

இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 14, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான உண்மைகளையும் அவர் விளக்கியுள்ளார். டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி […]

இலங்கை

பதுளை – வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி கார் ; இருபெண்கள் பலி

  • April 14, 2024
  • 0 Comments

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல ஆலயம் இன்று (14) இடம்பெற்றது. கம்பஹா தொம்பே புவக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம். கமலாவதி (70) மற்றும் மருமகள் ஒருவருடன் அவரது மாமியார் முதுகமஹேவகே சிரியாவதி (51) ஆகியோரும் […]