உலகம்

ஸ்பெயினில் விமானம் விபத்தில் பிரித்தானிய மாணவர் பலி

ஸ்பெயினில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய இளைஞரும் அவரது ஸ்பெயின் விமான பயிற்றுவிப்பாளரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று நள்ளிரவு ல் Cerro del Fraile பகுதியில் இடம்பெற்றுள்ளது பொலிஸ் மற்றும் சிவில் விமான விபத்து புலனாய்வாளர்கள் இப்போது தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வட அமெரிக்கா

இஸ்ரேல்- காஸா போர் தொடர்பில் கருத்து – பகிரங்க மன்னிப்பு கோரிய கனடிய அரசியல்வாதி

  • October 12, 2023
  • 0 Comments

ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் சாரா ஜாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இஸ்ரேல் – காஸா போர் தொடர்பில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாரா ஜாமா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். அண்மையில் ஜாமா X தளத்தில் இஸ்ரேல் – காசா போர் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.இந்த கருத்து தொடர்பில் யூத சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் ஜாமாவை பதவி விலகுமாறு கோரி இருந்தனர். மாகாண முதல்வர் டக் […]

உலகம்

இஸ்ரேலில் இருந்து பாரிசிக்கு விசேட விமான சேவை

இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலின் பின்னர் இரு நாடுளிலும் போர் பதட்டம் நிலவிவருகிறது. இதுவரை 1200 இஸ்ரேலியரும், சம அளவில் பலஸ்தீனியரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 18 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள், ஹமாஸ் அமைப்பால் கடந்த சனிக்கிழமை பயணக்கைதிகளாக இஸ்ரேலில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களில் இவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பரிசில் இருந்து Air […]

தென் அமெரிக்கா

டகும்பு சிறைச்சாலையில் வெடித்த கலவரம்; பிணைக் கைதிகாளாக 11 சிறைக் காவலர்கள்

  • October 12, 2023
  • 0 Comments

பராகுவே நாட்டில் சிறைக் கைதிகள் 11 சிறை காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராகுவே நாட்டில் மிகப்பெரிய சிறைச்சாலையான டகும்பு சிறைச்சாலையில் திடீரென கலவரம் ஏற்பட்டது.சுமார் நான்காயிரம் சிறைக் கைதிகள் வரை அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால் கலவரத்தை கட்டுப்படுத்த சிறைக்காவலர்கள் பெரிதும் போராடினர். இந்த சிறையில் சமூக விரோத கும்பல் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த திடீர் கலவரம் அரங்கேறியுள்ளது.இதனால் சிறைச்சாலையின் தகர கூரைகள் மற்றும் வாசல் பகுதிகளுக்கு […]

இலங்கை

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

  • October 12, 2023
  • 0 Comments

கண்டி, தெல்தோட்டை – லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் புதன்கிழமை (11) வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.புதன்கிழமை (11)திகதி காணாமல் போன குறித்த சிறுவன், வியாழக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லிட்டில்வெலி தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுவன், பாடசாலையில் மேலதிக வகுப்பினை முடித்துவிட்டு வீடு திரும்பிய வேளை, லிட்டில்வெலி ஓடையை கடக்கும் போது நீரில் அடித்துச் […]

இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வாட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தேவையான […]

பொழுதுபோக்கு

600 எபிசோடை கடந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி…

  • October 12, 2023
  • 0 Comments

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் டிஆர்பி-யில் டாப் 5 இடங்களை பிடித்து முடியாமல் திணறுவதால் இப்பொழுது டிஆர்பி சுத்தமாகவே இல்லாத ரொமான்டிக் சீரியலை மூட முடிவெடுத்துள்ளது. 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலின் இரண்டாவது சீசன் விஜய் டிவியின் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் முதல் சீசனில் காதல் ஜோடிகளாக இருந்த வெற்றி- அபி […]

ஐரோப்பா

இஸ்ரேலுக்கு இராணுவ உதவியை வழங்கும் ஜேர்மனி

ஜேர்மனி இஸ்ரேலுக்கு இராணுவ உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து உள்நாட்டில் ஹமாஸ் குழுவிற்கான ஆதரவை முறியடிப்பதாக உறுதியளிக்கிறது. ஜேர்மன் இராணுவத்தால் தற்போது குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஐந்து ஹெரான் டிபி போர் ட்ரோன்களில் இரண்டை பயன்படுத்த இஸ்ரேலிய கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் பிரஸ்ஸல்ஸில் கூறுகையில், போர்க்கப்பல்களுக்கான வெடிமருந்துகளை இஸ்ரேல் கோரியுள்ளது, அது இப்போது விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஷோல்ஸ் கூறுகையில், […]

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக தாமதப்படும் ஆப்பிரிக்கா உச்சி மாநாடு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் காரணமாக, ஆப்பிரிக்கத் தலைவர்களுடனான உச்சிமாநாடு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இதனை அறிவித்துள்ளார். இத்தாலி-ஆப்பிரிக்கா இடையேயான உச்சிமாநாடு, முதலில் ரோமில் அடுத்த மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் காரணமாக தற்காலிகமாக ஜனவரிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

லியோ திரைப்பட ரிலீஸை தடைவிதிக்க கோரி களத்தில் இறங்கிய தில் ராஜு

  • October 12, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க கோரி தில் ராஜு களத்தில் இறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார். தயாரிப்பாளர் தில் ராஜு, படங்களை தயாரிப்பது மட்டுமின்றி அதனை விநியோகமும் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் போல் […]