பொழுதுபோக்கு

600 எபிசோடை கடந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி…

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் டிஆர்பி-யில் டாப் 5 இடங்களை பிடித்து முடியாமல் திணறுவதால் இப்பொழுது டிஆர்பி சுத்தமாகவே இல்லாத ரொமான்டிக் சீரியலை மூட முடிவெடுத்துள்ளது.

600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலின் இரண்டாவது சீசன் விஜய் டிவியின் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் முதல் சீசனில் காதல் ஜோடிகளாக இருந்த வெற்றி- அபி இருவரும், இரண்டாவது சீசனில் எலியும் பூனையும் போல் எதிரும் புதிருமாக இருந்தனர்.

கலெக்டராக இருக்கும் அபி, பொறுக்கியாக இருக்கும் வெற்றியை எப்படியாவது கம்பி எண்ண வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவர்களுக்குள் இறக்கும் காதல் அவ்வப்போது வெளிப்பட்டு கண் கூசும் அளவுக்கு ரொமான்ஸ் செய்தனர்.

குறிப்பாக நடுக்கடலில் மாட்டிக் கொண்ட அபி- வெற்றி இருவரின் செல்ல சண்டை காட்சி, அதன் தொடர்ச்சியாக அபிக்கு சிலம்பம் கற்றுத் தருவதாக வெற்றி செய்த சேட்டை இவை எல்லாம் சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

இருப்பினும் இந்த சீரியலுக்கு எதிர்ப்பார்த்த அளவு டிஆர்பி கிடைக்காததால் இப்போது கிளைமாக்ஸ் காட்சியை அதிரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதில் நெகட்டிவ் கேரக்டர்களான கண்மணி மற்றும் பரமு இருவரையும் கையும் களவுமாக கலெக்டர் அபி பிடிக்கப் போகிறார். இதற்கு வெற்றி உறுதுணையாக நின்று கடைசியில் இருவரும் சேர போகின்றனர்.

இந்த சீரியலை இந்த வார இறுதியில் முடித்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து ‘நீ நான் காதல்’ என்ற புத்தம் புது சீரியலை விஜய் டிவி துவங்க போகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்