இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – ரஞ்சித்
இலங்கை மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுடன் நிதியமைச்சில் இன்று (13.10) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறினார். வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அங்கு நிறுவனங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் வருவாயை அதிகரித்து விரைவாக […]













