இலங்கை

துப்பரவுப்பணியின் போது ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!

  • October 13, 2023
  • 0 Comments

அம்பாறை – சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3,எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11, ஒரு […]

ஐரோப்பா

காசாவில் இருந்து வெளியேற பொது மக்களுக்கு உத்தரவு ; ஐ.நா கண்டனம்

  • October 13, 2023
  • 0 Comments

காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை கணடனம் தெரிவித்துள்ளது. காசா முனையில் இருந்து செயல்படும் ஆயுத ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் […]

இலங்கை

பொலிஸ் நிலையத்துக்குள் தீ வைத்துக் கொண்ட பெண்!

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹப்புத்தளை காவல்நிலையத்தின் மலசலக்கூடத்தில் அவர், தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகம்

1974 பெர்லின் சுவர் கொலை: முன்னாள் ஸ்டாசி அதிகாரி மீது குற்றச்சாட்டு

1974 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் வழியாக விடப்பட்ட ஒருவரைக் கொன்றதாகக் கூறி, கம்யூனிஸ்ட் கிழக்கு ஜேர்மனியின் ஸ்டாசி இரகசியப் பொலிஸின் முன்னாள் உறுப்பினர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு ஜேர்மனியில் பாதுகாப்புச் சோதனைச் சாவடி வழியாகச் சென்றுகொண்டிருந்த அந்த நபர் பின்னால் சுடப்பட்டார். 31 வயதான பிரதிவாதி, போலந்து மனிதனை “நடுநிலைப்படுத்த” ஸ்டாசியால் அறிவுறுத்தப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். தற்போது 79 வயதாகும் அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி!

  • October 13, 2023
  • 0 Comments

முழுவதுமாக அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கை மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : இலவசமாக வழங்கப்படும் விசா!

  • October 13, 2023
  • 0 Comments

சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இலவச சுற்றுலா விசாவுக்கான அமைச்சரவை பத்திரத்தை சுற்றுலா அமைச்சு சமர்ப்பித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து இந்த யோசனையை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் […]

ஆசியா

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேல் தூதர்

  • October 13, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்கள் உலகை பரபரப்படையச் செய்துள்ள நிலையில், சீனாவில், இஸ்ரேல் தூதர் ஒருவர் தாக்கப்பட்ட விடயம் கவனம் ஈர்த்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில், இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கான காரணம் குறித்து தாங்கள் விசாரித்துவருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி

ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

  • October 13, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போரை எதிர்த்து விமானத்தில் போராட்டம் நடத்திய ரஷ்ய தொலைக்காட்சி தொகுப்பாளர் விஷம் குடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து பிரெஞ்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தனது மகளுடன் ரஷ்யாவிலிருந்து பிரான்சுக்கு தப்பிச் சென்ற மெரினா ஓவ்சியனிகோவா, அவசர சேவைகளை அழைத்ததாகவும், தனது பாரிஸ் குடியிருப்பை விட்டு வெளியேறும்போது திடீரென நோய்வாய்ப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவம்,  என்று பிரெஞ்சு தலைநகரின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 45 வயதான அவர், தான் விஷம் […]

இலங்கை

வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை- புல்மோட்டையில் வறிய மாணவர்களுக்கு ஒன்றரை மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் முன் மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம், ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. புல்மோட்டை சதாம் வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

செய்தி விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்டும் உண்டு… 123 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள ஒப்புதல்

  • October 13, 2023
  • 0 Comments

2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்றது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஒலிம்பிக் (2024ம் ஆண்டு ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் […]