இலங்கை செய்தி

எரிபொருள் விலை மீண்டும் உயரும் சாத்தியம்

  • November 16, 2023
  • 0 Comments

  அடுத்த வருடம் முதல் VAT வரியை 15% இல் இருந்து 18% ஆக அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்குமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, எதிர்காலத்தில் மக்கள் வாழ முடியாது எனவும், அடுத்த வருடம் எரிபொருள் விலை […]

உலகம் செய்தி

சீனாவில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!! 26 பேர் பலி

  • November 16, 2023
  • 0 Comments

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். Yeonju நிலக்கரி தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நான்கு மாடி கட்டிடத்தில் இன்று (16) காலை தீ பரவியதாக கூறப்படுகிறது. மேலும் 63 பேர் தீ விபத்தினால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுதலை

  • November 16, 2023
  • 0 Comments

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் பிணை நிபந்தனை விதித்தார். சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்தியதற்காக அவர்கள் சமீபத்தில் கைது […]

இலங்கை செய்தி

மீண்டும் விளையாட தயார் – திசர பெரேரா

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தான் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவுக்குழுவின் புரிந்துணர்வு இன்மையினால் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் நீக்கப்பட்டு முறையற்ற தெரிவுகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகக் கிண்ணத் தொடரில் திறமையான மற்றும் பொருத்தமான துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு தெரிவுக்குழு முன்னுரிமை […]

இலங்கை செய்தி

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

  • November 16, 2023
  • 0 Comments

  2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி ஊடகத்திற்கான அதிகூடிய வெட்டுப் புள்ளி 154 ஆகும். அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி […]

ஆசியா செய்தி

ஜெருசலேம் அருகே தாக்குதல் நடத்திய 3 துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை

  • November 16, 2023
  • 0 Comments

ஜெருசலேம் அருகே சோதனைச் சாவடியைத் தாக்கிய மூன்று துப்பாக்கிதாரிகள், ஆறு பாதுகாப்புப் படையினரைக் காயப்படுத்தினர்,இஸ்ரேலிய பொலிசார் அவர்களைத் தடுத்ததால் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை தலைவர் கோபி ஷப்தாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்ரேலில் ஒரு பெரிய தாக்குதல் அல்லது படுகொலைக்காக” தாக்குதல் நடத்தியவர்கள் கைத்துப்பாக்கிகள், கோடாரிகள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகினர், ஒருவர் படுகாயமடைந்தவர் உட்பட, அவசர மருத்துவ சேவையான மேகன் டேவிட் […]

உலகம் செய்தி

கத்தார் நாட்டவர்களுக்காக பிரித்தானியாவில் ஆரம்பமாகும் புதிய திட்டம்

  • November 16, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) திட்டம் இன்று முதல் இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் கத்தார் நாட்டினருக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிரித்தானிய எல்லையை மாற்றியமைப்பதிலும் டிஜிட்டல் மயமாக்குவதிலும் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்களிப்பை நிரூபிக்கிறது, இது பிரித்தானியாவிற்கு வரும் மில்லியன் கணக்கான முறையான பயணிகளுக்கு எதிர்காலத்தில் பெருகிய முறையில் தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. கத்தார் நாட்டினர் 25 அக்டோபர் 2023 முதல் தங்கள் ETA க்கு விண்ணப்பிக்க முடியும், பெரும்பாலானவர்கள் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துகின்றனர், இது […]

இலங்கை செய்தி

இலங்கை கிரிக்கெட் தொடர்பான வழக்கில் இருந்து மற்றுமொரு நீதிபதி விலகினார்

  • November 16, 2023
  • 0 Comments

  கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதிபதி இன்று விலகியுள்ளார். இந்த மனு இன்று நீதியரசர்களான டி. என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். இதன்படி, மனு விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் இரட்டை குழந்தை உடைய கற்பிணித்தாயும் ஓர் பிள்ளையும் மரணம்

  • November 16, 2023
  • 0 Comments

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவர் இன்று (16) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி […]

விளையாட்டு

CWC – இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

  • November 16, 2023
  • 0 Comments

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் […]