இந்தியா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழப்பு!

  • November 26, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்ததில் தொழிலாளர்கள் குழுவொன்று உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு 03 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

இலங்கை

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன!

  • November 26, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றுடன்  (25.11) நிறைவடைந்துள்ளது. ஆறாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின்போது,   ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும், மணிக்கூட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. ஸ்கானர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் […]

உலகம்

கொன்று குவிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் ;இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்!

  • November 26, 2023
  • 0 Comments

அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். […]

இலங்கை

இலங்கையின் மேல் மாகாணத்தில் திடீரென மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கையின் வெல்லம்பிட்டிய,  சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஏறக்குறைய 4 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இன்று (26.11) குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகைய மேற்கொண்டுள்ளனர்.  மொத்தம் 138 போலீசார் மற்றும் 200 ராணுவ வீரர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதன் போது 61 வீடுகள் மற்றும் 196 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையின் சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு!

  • November 26, 2023
  • 0 Comments

இலங்கையின் சீதுவ, கொடுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

இலங்கையில் பண்டிகை காலத்திற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • November 26, 2023
  • 0 Comments

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை வழங்குவதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாரிய ஆலை உரிமையாளர்கள் அதனை சந்தைக்கு விடாமல் மறைத்து வைத்திருப்பதால் தற்போது சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் […]

வட அமெரிக்கா

இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் நிம்மதியாக வாழ்வதை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை – பைடன் குற்றச்சாட்டு

  • November 26, 2023
  • 0 Comments

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அருகருகே நிம்மதியாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத ஹமாஸ்தான் இந்த தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

வனிதா மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்; அதிர்ச்சி செய்தி

  • November 26, 2023
  • 0 Comments

பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்ட் எண்ட்ரி மூலம் ஐந்து பேர் வீட்டுக்குள் சென்றனர். மொத்தம் 23 பேரில் பவா செல்லதுரை தானாக வெளியேறினார். மேலும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனிலேயே பிரதீப்தான் ஹாட் டாபிக்காக இருந்தார். வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்து வியூகங்கள் […]

இந்தியா

மும்பையில் அதிர்ச்சி சம்பவம்! போதைப்பொருள் வாங்க பிள்ளைகளை விற்ற பெற்றோர்

  • November 26, 2023
  • 0 Comments

போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைகளை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். சம்பவம் குறித்து தம்பதியின் குடும்பத்தினர் அறிந்தவுடன், கதை வெளிச்சத்திற்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடும் நெருக்கடியில் உணவகங்கள் – வங்குரோத்தடையும் அபாயம்

  • November 26, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலங்களில் உணவகங்களானது பாரியளவு வருமானத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பல 100க் கணக்கான உணவகங்கள் வங்குரோத்து நிலையை அடைய கூடிய அபாயமும் காணப்பட்டு இருந்தது. இதன் காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது மேலதிக வரியை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்து இருந்தது. இவ்வாறு 7 சதவீதமாக குறைப்பதன் மூலம் இந்த உணவகங்கள் ஓரளவு வருமானத்தை ஈட்டக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கத்துக்கு வருடம் ஒன்றுக்கு மேலதிக […]