இந்தியா செய்தி

2027 தேர்தலுக்கு பாஜக தயாராகிறது: ஆறு பிராந்தியங்களுக்கும் அமித் ஷா விஜயம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேர்தல் முன்னேற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சுற்றுப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, உத்தரப் பிரதேசத்தின் ஆறு அமைப்பு ரீதியான பிராந்தியங்களுக்கும் அமித் ஷா விஜயம் செய்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

முதற்கட்டமாக நவம்பர் மாதத்திலேயே இரண்டு பிராந்தியங்களுக்கான விஜயங்களை மேற்கொள்ள கட்சி திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் இரவு தங்கியிருந்து, உள்ளூர் கட்சித் தலைவர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தலுக்கான வியூகங்கள், கட்சியின் அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட மட்டத்திலான கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் முக்கிய நகர்வாக இந்தச் சுற்றுப்பயணம் கருதப்படுகிறது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி