இந்தியா செய்தி

ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய அமைப்புக்கு இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் தடை

இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (Islamic Research Foundation - IRF) விதிக்கப்பட்ட தடையை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (Islamic Research Foundation – IRF) விதிக்கப்பட்ட தடையை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், ஜாகிர் நாயக் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும் பல்வேறு மத சமூகங்களுக்கு இடையில் பகைமை, வெறுப்பு மற்றும் நல்லிணக்கமின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக இந்திய உள்துறை அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஜாகிர் நாயக்கின் உரைகள் மற்றும் அறிக்கைகள் மதங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வைத் தூண்டுவதாகவும், இளைஞர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் அமைச்சு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச செய்மதித் தொலைக்காட்சி வலைப்பின்னல்கள், இணையம், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடையும் வகையில் அவர் உரைகளை நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை நீடிக்காவிட்டால், அமைப்பு மீண்டும் தனது செயற்பாடுகளைத் தொடங்கி, நாட்டின் மத நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும் என இந்திய மத்திய அரசு அச்சம் வெளியிட்டுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு, முதன்முதலில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தத் தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக இந்தத் தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி