இலங்கை: பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம் !
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட விசேட அரச அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், வெண்ணெய், பாலுற்பத்தி பொருட்கள் பலவற்றின் தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நிதியமைச்சு இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. சல்மன் மீன், தோடம்பழம், முந்திரிகைப் பழம், யோகர்ட், அப்பிள் பழம், வெண்ணெய் உள்ளிட்ட […]













