இலங்கை

இலங்கையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கங்கள்!

  • December 11, 2023
  • 0 Comments

அரச மற்றும் மாகாண சேவைகள் சங்கம் நாளைய தினம் (12.12) சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அழைப்பாளர் சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் […]

தமிழ்நாடு

சென்னை – அட்டைப்பெட்டியில் சிசுவின் உடல்… அலட்சியமாக செயல்பட்ட பிணவறை ஊழியர் சஸ்பெண்ட்!

  • December 11, 2023
  • 0 Comments

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலைத் தகனம் செய்ய 2500 ரூபாய் கேட்ட நிலையில், அதனை தந்தை தரமறுத்ததால் நான்கு நாட்கள் கழித்து எந்தவிதமான துணியும் சுற்றாமல் ஒப்படைத்த பிணவறை ஊழியர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை புளியந்தோப்பை சேர்ந்த மசூத் – சௌமியா தம்பதிக்கு பிறந்த குழந்தை இறந்த நிலையில், நேற்று குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையின் தாயார் சௌமியா கர்ப்பமாக இருந்த நிலையில், […]

ஆஸ்திரேலியா

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த திட்டமிடும் அவுஸ்ரேலியா!

  • December 11, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுகளில் இருந்து  குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது, இதன் காரணமாக, […]

இலங்கை

”இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே” ஜனக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார். “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார். அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அவ்வாறான மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் […]

பொழுதுபோக்கு

“டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய்”

  • December 11, 2023
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஏற்பட்ட டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவௌர்கிறார். அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில் இமானின் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. சிவகார்த்திகேயனோ இதுகுறித்து எந்த […]

ஆசியா

இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 133 பாலஸ்தீனியர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்ததால், நேற்று குறைந்தது 133 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்த குறைந்தது 133 பாலஸ்தீனியர்களின் உடல்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கிடையில், கான் யூனிஸ் மற்றும் ஜபாலியா முகாமில் பல திசைகளில் இருந்து ஊடுருவி வரும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே கடுமையான போர்கள் நடைபெற்று […]

உலகம்

தென்கொரியாவில் விழுந்து விபத்திற்குள்ளான அமெரிக்க விமானம்!

  • December 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் F-16 போர் விமானம் ஒன்று தென் கொரியாவில் இன்று (11.12) விழுந்து விபத்திற்குள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு விழுந்து விபத்திற்குள்ளாகியதாக அறிய முடிகிறது. குறித்த விமானத்தின் விமானி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  குன்சானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும்,  தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கையை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ […]

இலங்கை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை தீ விபத்து: நோயாளர்கள் வெளியேற்றம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ‘மெத்சிறி செவன’ கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை அணைத்து வளாகத்திற்குள் இருந்த அனைத்து நோயாளிகளையும் வெளியேற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

சுவிஸில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு!

  • December 11, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் சியோன் நகரில் இன்று (11.12)  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 35,000 பேர் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை  Valais கன்டோனில் உள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பு : திரளாக ஒன்றுக்கூடிய மக்கள்!

  • December 11, 2023
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து அதிகரித்து வரும் யூத எதிர்ப்புக்கு எதிராக நேற்று (10.12) ஆயிரக்கணக்கான மக்கள் பெல்ஜியம் மற்றும் ஜேர்மன் தலைநகரங்களில் பேரணி நடத்தினர். இதற்கு முன்பு பாரிஸ் மற்றும் லண்டனில் நடந்த அணிவகுப்புகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினிலும் போராட்டங்கள் வெடித்தன. குறைந்தது 4,000 பேர் இந்த பேரணிகளில் கலந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்பு […]