உலகம்

தென்கொரியாவில் விழுந்து விபத்திற்குள்ளான அமெரிக்க விமானம்!

அமெரிக்காவின் F-16 போர் விமானம் ஒன்று தென் கொரியாவில் இன்று (11.12) விழுந்து விபத்திற்குள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றே இவ்வாறு விழுந்து விபத்திற்குள்ளாகியதாக அறிய முடிகிறது.

குறித்த விமானத்தின் விமானி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  குன்சானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும்,  தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கையை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்