ஐரோப்பா

1000 ஆண்டுகள் பழைமையான பேயக்ஸ் திரைச்சீலை பிரித்தானியாவில்

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை நேற்றைய தினம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றிக்கூறியுள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கலைப்படைப்பு, பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து, அதி உச்ச பாதுகாப்புடன் குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் மூலம்  பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

பிரித்தானிய அருங்காட்சியகம், டோவரின் வெள்ளைப் பாறைகளின் மீது ‘மெர்சி’ (நன்றி) என்ற வார்த்தையுடன் கூடிய அதன் பிம்பத்தை ஒளிபரப்பி அந்தத் திரைச்சீலையை வரவேற்றது.

1066-ஆம் ஆண்டின் நார்மன் (Norman) படையெடுப்பைச் சித்தரிக்கும் இந்தத் திரைச்சீலை, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக  பிரிததானிய மண்ணுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்