1000 ஆண்டுகள் பழைமையான பேயக்ஸ் திரைச்சீலை பிரித்தானியாவில்
பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை நேற்றைய தினம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றிக்கூறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கலைப்படைப்பு, பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து, அதி உச்ச பாதுகாப்புடன் குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் மூலம் பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய அருங்காட்சியகம், டோவரின் வெள்ளைப் பாறைகளின் மீது ‘மெர்சி’ (நன்றி) என்ற வார்த்தையுடன் கூடிய அதன் பிம்பத்தை ஒளிபரப்பி அந்தத் திரைச்சீலையை வரவேற்றது. 1066-ஆம் ஆண்டின் நார்மன் (Norman) படையெடுப்பைச் சித்தரிக்கும் இந்தத் […]




