இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதியாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளதாக சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலை 17 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content