ஷிரந்தியின் உடல்நிலை எப்படி? மருத்து அறிக்கை இன்று கையளிப்பு
விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ஸவின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை இன்று (15) மாலை வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த குழுவில் 14 வைத்தியர்கள் உள்ளடங்குவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.
ஷிரந்தி ராஜபக்ஸவின் இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
10 மில்லியன் ரூபா அரச பணத்தை குற்றவியல் ரீதியாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நாளை(16) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




