ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!
ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது எனக் கூறிய அவர், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஈரான் சமீபத்தில் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது, இது விசித்திரமானது, ஏனெனில் நமது முற்றுகை ஏற்கனவே அதை மூடிவிட்டது. அவர்கள் அறியாமலேயே நமக்கு உதவுகிறார்கள்.
“நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒரு ஒப்பந்தத்தை வழங்குகிறோம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், ஏனெனில், அவர்கள் அதை ஏற்கவில்லை என்றால், அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்த்தெறியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.





