உலகம் செய்தி

ஈரான் போர்நிறுத்தத்தை மீறியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

ஹோர்முஸ் நீரிணையில்  துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஈரான்   போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தத் தாக்குதல் ஒரு பிரெஞ்சு கப்பலும், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலையும் இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நீரிணையை மூடுவதற்கான ஈரானின் முடிவை விசித்திரமானது என விமர்சித்த ட்‌ரம்ப், அமெரிக்காவின் முற்றுகை ஏற்கனவே அந்தப் பாதையை முடக்கியிருந்ததாக கூறினார்.

“இதனால் அவர்கள் தாமாகவே நமக்கு உதவுகிறார்கள்; மூடப்பட்ட பாதையால் தினமும் 500 மில்லியன் டொலர் இழப்பது அவர்களே. அமெரிக்காவுக்கு எந்த இழப்பும் இல்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்ததன் மூலம் போர்நிறுத்த நிபந்தனைகளை அமெரிக்காவே மீறியதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி